பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

Posted On: 19 JUN 2025 12:51PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மீள்குடியேற்ற இயக்குநரகம், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் முன்னாள் அதிகாரிகளுக்காக பிரத்யேக வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்கிறது. இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், சரக்கு போக்குவரத்து, நிர்வாகம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பொறியியல் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்த முகாம் ஜூன் 20-ம் தேதி புதுதில்லியில், கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மானெக்ஷா மையத்தில் காலை 9:00 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்பதற்கு www.esmhire.com என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் படை வீரர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் மீள்குடியேற்ற இயக்குநரகம் நடப்பாண்டில் நாடு முழுவதும் 18 வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்கும் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு முன்னாள்  அதிகாரிகள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

முன்னாள் படைவீரர்களின் தலைமைத்துவம், ஒழுக்கம், தொழில்நுட்பத் திறன் போன்ற தங்களது திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த விவரங்களுக்கு கீழ்கண்ட முகவரியை அணுகுமாறும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறும்  பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது:

இயக்குநர் டிஜிஆர்: dirsedgr@desw.gov.in | தொலைபேசி எண் 011-20862532

இணை இயக்குநர் டிஜிஆர்: seopadgr@desw.gov.in | தொலைபேசி எண் 011-20862432

***

(Release ID: 2137589)

AD/SMB/SV/KPG/KR


(Release ID: 2137703) Visitor Counter : 5