வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் இங்கிலாந்துக்கு அரசு முறைப் பயணம்

प्रविष्टि तिथि: 18 JUN 2025 9:51AM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்றும், நாளையும் (2025 ஜூன் 18, 19) இங்கிலாந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். குறிப்பாக இந்திய-இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நிறைவடையும் என இருநாட்டுப் பிரதமர்களும் அறிவித்த நிலையில், இங்கிலாந்துடனான பொருளாதார - வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது.

திரு பியூஷ் கோயலின் பயணம் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், வாய்ப்புகளைப் பயன்படுத்துவதையும், பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார உறவுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, ​​திரு பியூஷ் கோயல், இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜோனாதன் ரெனால்ட்ஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார். தடையற்ற வர்த்தக ஒப்பந்தப்  பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இருவரும் ஆய்வு செய்து, அதை இறுதி செய்து செயல்படுத்துவதற்கான தெளிவான ஒரு திட்டத்தை வகுப்பார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார முன்னுரிமைகள், நிதி ஒத்துழைப்பு, முதலீடுகள் குறித்து விவாதிக்க, இங்கிலாந்து நிதியமைச்சர் திருமதி ரேச்சல் ரீவ்ஸுடன் திரு பியூஷ் கோயல் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

படைப்பாற்றல் சார்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் இங்கிலாந்து கலாச்சாரத்துறை அமைச்சர் திருமதி லிசா நந்தியுடன் திரு பியூஷ் கோயல் பேச்சு நடத்தவுள்ளார்.

மதிப்புமிக்க இந்திய உலகளாவிய மன்றம் எனப்படும் இந்தியா குளோபல் ஃபோரத்தில் (IGF) நடைபெறவுள்ள முதலீடு, பொருளாதாரம் ஆகியவை தொடர்பான வட்டமேசை கூட்டத்தின் பல்வேறு அமர்வுகளிலும் அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார்.

***

(Release ID: 2137069)

VL/PLM/AG/KR


(रिलीज़ आईडी: 2137334) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati