வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள்) 142.43 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 5.75 சதவீதம் அதிகரித்துள்ளது

प्रविष्टि तिथि: 16 JUN 2025 4:34PM by PIB Chennai

2025-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள்) 142.43 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின்  134.69 அமெரிக்க டாலர்கள் என்பதோடு ஒப்பிட  5.75 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

2025-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சரக்குகள் ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு 77.19 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 74.89 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 3.07 சதவீதம் வளர்ச்சியை  பதிவு செய்துள்ளது.

பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 2025-ம் ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் 64.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.  கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 59.75 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 7.53 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

2025-ம் ஆண்டு மே மாதத்தில் அனைத்து ஜவுளித் துறைகளின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.  மின்னணு பொருட்கள், கரிம மற்றும் கனிம ரசாயனங்கள், மருந்துகள், கடல்சார் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.

மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு மே மாதத்தில்  2.97 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற நிலையிலிருந்து 54.10% அதிகரித்து  2025 மே மாதத்தில் 4.57 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிதாதுள்ளது.

கரிம மற்றும் கனிம ரசாயனங்கள் ஏற்றுமதி  கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் நடப்பாண்டில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

மருந்து பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு மே மாதத்தில் 2.31 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 7.38 சதவீதம் அதிகரித்து நடப்பாண்டு மே  மாதத்தில் 2.48 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 26.79 சதவீதம் அதிகரித்துள்ளது.

அனைத்து ஜவுளி ஏற்றுமதிகளின் மொத்த வருவாய் 2024-ம் ஆண்டு மே மாதத்தில் 1.36 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 11.35 சதவீதம் அதிகரித்து 2025-ம் ஆண்டு மே மாதத்தில் 1.51 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136680

***

AD/TS/SV/AG/DL


(रिलीज़ आईडी: 2136764) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi