சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
ஜோத்பூரில் உள்ள வறண்ட வன ஆராய்ச்சி நிறுவனத்தில் நாளை நடைபெறும்
பாலைவனமாதல் மற்றும் வறட்சியை தவிர்ப்பதற்கான உத்திகள் குறித்த தேசிய பயிலரங்கிற்கு மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை தாங்குகிறார்
प्रविष्टि तिथि:
16 JUN 2025 5:23PM by PIB Chennai
உலக பாலைவனமாதல் மற்றும் வறட்சி தவிர்ப்பு தினத்தையொட்டி நாளை (2025 ஜூன் 17) "பாலைவனமாதல் மற்றும் வறட்சியை தவிர்ப்பதற்கான உத்திகள்" என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ் தொடங்கி வைக்கிறார்.
இந்தப் பயிலரங்கம் 2025-ம் ஆண்டுக்கான உலகளாவிய கருப்பொருளான "நிலத்தை மீட்டெடுங்கள், வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள் " என்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்தப் பயிலரங்கம், பருவநிலை மீள்தன்மை, உயிரி பன்முகத்தன்மை மற்றும் நிலையான கிராமப்புற மேம்பாட்டிற்கான நில மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்.
ராஜஸ்தானில் லுனாவாஸ் பகரில் வறண்ட வன ஆராய்ச்சி நிறுவனத்தின் 10.8 ஹெக்டேர் கேம்பா நிதியுதவி திட்டம் போன்ற புதுமையான நில மறுசீரமைப்பு மாதிரிகளை பகிர்ந்து கொள்ளுதல்.
2030-ம் ஆண்டுக்குள் பாலைவனமயமாதலை குறைப்பதற்கான இந்தியாவின் தேசிய உறுதிப்பாட்டை நோக்கிய முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல், வறட்சியைத் தடுப்பதற்கான தயார்நிலை மற்றும் நிலையான நிலப் பயன்பாடு குறித்து மத்திய மற்றும் மாநில நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் குறித்து இதில் கவனம் செலுத்தப்படும்.
இந்தப் பயிலரங்கம் விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், வன அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை ஒன்றிணைக்கும்.
***
(Release ID: 2136707)
AD/TS/IR/RR/KR/DL
(रिलीज़ आईडी: 2136750)
आगंतुक पटल : 29