மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் முகேஷ் படேல் தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் பொறியியல் பள்ளி மற்றும் நர்சி மோஞ்சி மேலாண்மை ஆய்வுகள் நிறுவனக் கட்டிடத்தைத் திறந்து வைத்தனர்
Posted On:
14 JUN 2025 8:23PM by PIB Chennai
மகாராஷ்டிர முதல்வர் திரு. தேவேந்திர ஃபட்னாவிஸ் உடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மும்பையில் புதிதாக உருவாக்கப்பட்ட அதிநவீன முகேஷ் படேல் தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் பொறியியல் பள்ளியைத் திறந்து வைத்தார், ஸ்ரீ விலே பார்லே கெலவானி மண்டல்-இன் கல்வி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார் மற்றும் நர்சி மோஞ்சி மேலாண்மை ஆய்வுகள் நிறுவனக் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை 2020 இன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், இது வெறும் அரசின் கல்விக் கொள்கை இல்லை, இது ஒரு தத்துவார்த்த ஆவணம் மற்றும் நாட்டில் தரமான கல்வியை வழங்குவதற்கான ஒரு வழிமுறை என்றும் குறிப்பிட்டார். தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளைப் பின்பற்றி, குறிப்பாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வி நிலையில், தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளை விருப்பமான கல்வி ஊடகமாக ஏற்றுக்கொள்வதற்கு இப்போது எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சர் பேசினார். நமது குழந்தைகளும் இளைஞர்களும் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் படிப்பதன் மூலம் உலகளாவிய தலைவர்களாக மாற முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பட்டங்களை வாங்குவதை விட திறமையை வளர்ப்பது மிக முக்கியம் என்று கூறிய அமைச்சர், இந்திய பாரம்பரிய அறிவில் நம்பிக்கை வைத்து, திறமையை அதிகரிக்க வேண்டும் என்று இளைஞர்களை வலியுறுத்தினார். வேலை தேடுபவர்களாக மாறுவதற்குப் பதிலாக, வேலை வழங்குபவர்களாக அவர்கள் மாற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தொழில்முனைவோராக இயங்க வேண்டும் என்றும், உலகின் பிரச்சினைகளைத் தீர்க்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களித்து, நாட்டின் பின்தங்கிய குடிமக்களை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2136409
***
(Release ID: 2136409)
RB/RJ
(Release ID: 2136467)