பாதுகாப்பு அமைச்சகம்
டேராடூனில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்புப்பை இலங்கை ராணுவத் தளபதி பார்வையிட்டார்
प्रविष्टि तिथि:
14 JUN 2025 2:39PM by PIB Chennai
இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.கே.ஜி.எம் லசந்த ரோட்ரிகோ, 2025 ஜூன் 11 முதல் 14 வரை இந்தியாவில் நான்கு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவரது பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
லெப்டினன்ட் ஜெனரல் ரோட்ரிகோ டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி நிறைவு அணிவகுப்பைப் பார்வையிட்டார். அங்கு அவர் டிசம்பர் 1990-ல் 87-வது பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றார். இப்போது இலங்கை ராணுவத்தின் தளபதியாக இருக்கும் அவர், இலங்கை வீரர்கள் உட்பட புதிய அதிகாரிகளின் பயிற்சிப் நிறைவு மதிப்பாய்வு அதிகாரியாக இதில் பங்கேற்றார்.
இங்கு இதுவரைப் பயிற்சி பெற்ற இலங்கை இயராணுவ அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கையை 296 ஆகும். இது நட்பு வெளிநாட்டுப் படைகளை சிறப்பாக வடிவமைப்பதில் இந்தியாவின் தொடர்ச்சியான பங்கை எடுத்துக்காட்டுகிறது.
தற்போது, சுமார் 700 இலங்கை ராணுவ வீரர்கள் பல்வேறு இந்திய ராணுவ நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவற்றில் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி, காலாட்படை பள்ளி, ராணுவ விமானப் பாதுகாப்பு கல்லூரி, பீரங்கி பள்ளி, கவசப் படை மையம் போன்ற மதிப்புமிக்க நிறுவனங்கள் அடங்கும். இந்த பயிற்சி ஒத்துழைப்பு, தொழில்முறை திறனை உருவாக்குவது மட்டுமல்லாமல், இரு படைகளுக்கும் இடையிலான பிணைப்புகளையும் ஆழப்படுத்துகிறது. லெப்டினன்ட் ஜெனரல் ரோட்ரிகோவின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான வழக்கமான ராணுவ ஈடுபாடுகளின் பாரம்பரியத்தைத் தொடர்கிறது.
******
(Release ID: 2136324)
AD/PLM/SG
(रिलीज़ आईडी: 2136353)
आगंतुक पटल : 7