பாதுகாப்பு அமைச்சகம்
விமானப்படை அகாடமியில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
14 JUN 2025 12:49PM by PIB Chennai
இந்திய விமானப்படையின் விமான, தரை செயல்பாட்டுப் பிரிவுகளின் வீரர்கள் பயிற்சியின் வெற்றிகரமான நிறைவைக் குறிக்கும் வகையில், ஹைதராபாத்தில் உள்ள துண்டிகலில் உள்ள விமானப்படை அகாடமியில் (ஏஎஃப்ஏ - AFA) ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு (சிஜிபி - CGP) இன்று (ஜூன் 14, 2025) நடைபெற்றது. விமானப்படைத் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் அணிவகுப்பின் மதிப்பாய்வு அதிகாரியாக செயல்பட்டார். பெண்கள் உட்பட மொத்தம் 254 விமானப் படை வீரர்கள் இன்று பட்டம் பெற்றனர்.
விமானப் படைத் தலைமைத் தளபதியை பயிற்சிக் கட்டளையின் விமான அதிகாரி ஏர் மார்ஷல் தேஜிந்தர் சிங் வரவேற்றார்.
இந்த நிகழ்வில், இந்திய கடற்படையைச் சேர்ந்த 09 அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த 07 அதிகாரிகள், நட்பு நாட்டைச் சேர்ந்த ஒரு பயிற்சியாளருக்குப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததற்காக 'சான்றிதழ்கள்' வழங்கப்பட்டன. இந்த விழாவில் முக்கியப் பிரமுகர்கள், பட்டம் பெற்ற வீரர்கள், அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அணிவகுப்பில் உரையாற்றிய விமானப் படைத் தலைமைத் தளபதி, ஒவ்வொரு இந்தியரும் இந்திய விமானப்படையின் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்திருப்பதாகக் கூறினார். இன்றைய விழா இந்த அதிகாரிகளின் தொழில்முறை பயணத்தின் ஆரம்பம் மட்டுமே எனவும் அதன் எல்லைகளை விரிவுபடுத்தவும் புதிய திறன்களை மேம்படுத்தவும் அவர்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். சவால்களுக்கு மத்தியில் முழுமையான அர்ப்பணிப்பு, இடைவிடாத கவனத்துன் பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
****
(Release ID: 2136314)
AD/PLM/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2136350)
வருகையாளர் எண்ணிக்கை : 54