சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஆலோசனை நிறுவனங்களுக்கான ஒரு பொறியாளருக்கு எத்தனை திட்டங்கள் என்ற எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு
प्रविष्टि तिथि:
12 JUN 2025 4:41PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரம், கண்காணிப்பு செயல்முறையை மேம்படுத்தும் வகையில், தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் கட்டுமானம், பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிடும் ஆலோசனை நிறுவனங்களுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒரு 'பொறியாளருக்கு' அதிகபட்சமாக 10 திட்டங்கள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதன்படி தனிநபர் பொறியாளர், பொறியாளர் குழுக்கள் அல்லது மேற்பார்வை ஆலோசகராக பணிபுரியும் ஆலோசனை நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களின் மேற்பார்வை பணிகளை அதற்கென நியமிக்கப்பட்ட 'பொறியாளருக்கு' ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டது.
குறிப்பிட்ட திட்டப்பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட 'பொறியாளர்' மூலம் ஆலோசகர் குழுவால் விவரக்குறிப்புகள் மற்றும் ஒப்பந்த விதிகளின் இணக்க நடைமுறைகள் கட்டுப்படுத்தப்பட்டு மேற்பார்வையிடப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான திட்டங்களை மேற்பார்வையிடும் காரணமாக ஏற்படும் பணிச்சுமையைக் குறைக்கும் வகையிலும் பணியின் தரம் மற்றும் பராமரிப்பை மேம்படுத்தும் வகையிலும் நியமிக்கப்பட்ட பொறியாளர் ஒப்பந்தக் கடமைகளை சரியாக நிறைவேற்றும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை கலப்பின வருடாந்திர தொகை முறை மற்றும் பொறியியல், கொள்முதல், கட்டுமானம் போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் வகையில் ஆலோசனை நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய விதிகளின் படி தனிநபர் பொறியாளர்கள் அல்லது பொறியாளர் குழு மற்றும் ஆலோசனை நிறுவனங்களின் நியமனம் மற்றும் அவரது பொறுப்புகள் தொடர்பான விதிகளும் இதில் அடங்கும்.
ஆலோசனை நிறுவனம் மூலம் நியமிக்கப்படும் 'பொறியாளர்' மாதந்தோறும் அவருக்கென ஒதுக்கப்பட்ட திட்டப் பணிகளை மேற்பார்வையிட்டு, அது குறித்த தரவுகள் மற்றும் சிவில் ஒப்பந்த விதிகளின்படி அறிக்கை அளிக்க வேண்டும். ஒரு 'பொறியாளருக்கு' அதிகபட்சமாக பத்து திட்டங்கள் என்ற புதிய கட்டுப்பாடு 60 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வருகிறது. இந்தக் காலகட்டத்தில் பொருத்தமான மாற்றங்களை ஆலோசனை நிறுவனங்கள் மேற்கொள்ளும் வகையில் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு 'பொறியாளருக்கு' அதிகபட்ச எண்ணிக்கையிலான திட்டங்கள் எத்தனை என்று கட்டுப்படுத்துவதன் மூலம் அவர்களது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதுடன், நெடுஞ்சாலைகளில் தரம் மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதற்கும், நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான, சீரான, தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்வதற்கும் உதவிடும்.
------
(Release ID: 2135941)
AD/TS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2135994)
आगंतुक पटल : 16