விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் நாளை தில்லியைச் சேர்ந்த விவசாயிகளை சந்திக்கிறார்.
प्रविष्टि तिथि:
10 JUN 2025 6:39PM by PIB Chennai
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், ஜூன் 11, 2025 அன்று, வளர்ச்சி அடைந்த விவசாயத்துக்கான சங்கல்ப இயக்கத்தின் ஒரு பகுதியாக, தில்லியைச் சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடுவார். உஜ்வாவின் கிருஷி விஞ்ஞான் கேந்திரா மற்றும் பூசாவின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவையும் இந்த நிகழ்வில் பங்கேற்கும்.
மத்திய வேளாண் அமைச்சர் பிற்பகலில் திகிபூர், பக்தவர்பூர் மற்றும் வடக்கு தில்லிக்கு விஜயம் செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடுவார், மேலும் கிசான் சௌபால் மூலம் இந்த உரையாடல் நடைபெறும். இதைத் தொடர்ந்து, விவசாய தொழில்நுட்பத்தில் விவசாய ட்ரோன்களின் பயன்பாட்டை அவர் ஆய்வு செய்வார். பின்னர், விவசாயிகளைச் சந்திக்க ஒரு நடைப்பயணத்தை மேற்கொள்வார். சமீபத்திய விவசாய தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த துல்லியமான தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவது இந்தப் பிரச்சாரத்தின் முதன்மை நோக்கமாகும்.
இந்த 15 நாள் மெகா பிரச்சாரம் மே 29 அன்று ஒடிசாவில் தொடங்கி ஜூன் 12 அன்று முடிவடையும். இதுவரை, திரு சிவராஜ் சிங் சவுகான் ஒடிசா, ஜம்மு, ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, உத்தராகண்ட், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135456
***
(Release ID: 2135456)
AD/RB/DL
(रिलीज़ आईडी: 2135520)
आगंतुक पटल : 12