விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் தெலங்கானாவில் விவசாயிகளை சந்தித்தார்
Posted On:
09 JUN 2025 8:20PM by PIB Chennai
'வளர்ந்த வேளாண் உறுதி இயக்கம்' திட்டத்தின் கீழ், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இன்று தெலங்கானாவில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
முதலில் அவர் தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மன்சன்பள்ளி கிராமத்திற்குச் சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடினார், அதைத் தொடர்ந்து ராமச்சந்திரகுடா கிராமத்தில் கிசான் சௌபால் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கலந்துரையாடல்களின் போது, விவசாயிகள் தாங்கள் பல்வகைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைந்த விவசாய முறைகளைப் பின்பற்றுவதாக அமைச்சரிடம் தெரிவித்தனர், இது அவர்களின் உற்பத்தி மற்றும் வருமானம் இரண்டையும் அதிகரிக்க உதவியுள்ளது. கிசான் சௌபாலுக்குப் பிறகு, இப்ராஹிம்பட்டணத்தின் மங்கலப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் ஸ்ரீ சவுகான் விவசாயிகளிடம் உரையாற்றினார்.
'விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்' திட்டத்தின் கீழ், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ சிவராஜ் சிங் சவுகான் இன்று தெலுங்கானாவில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
முதலில் அவர் தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மன்சன்பள்ளி கிராமத்திற்குச் சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடினார், அதைத் தொடர்ந்து ராமச்சந்திரகுடா கிராமத்தில் கிசான் சௌபால் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கலந்துரையாடல்களின் போது, விவசாயிகள் தாங்கள் பல்வகைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைந்த விவசாய முறைகளை பின்பற்றுவதாக அமைச்சரிடம் தெரிவித்தனர், இது அவர்களின் உற்பத்தி மற்றும் வருமானம் இரண்டையும் அதிகரிக்க உதவியுள்ளது. கிசான் சௌபாலுக்குப் பிறகு, இப்ராஹிம்பட்டணத்தின் மங்கலப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் திரு சவுகான் விவசாயிகளிடம் உரையாற்றினார்.
போதுமான தானிய இருப்புக்களை பராமரிப்பதன் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல்; விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்தல்; நாட்டின் 1.45 பில்லியன் மக்களுக்கு சத்தான உணவை வழங்குதல்; மண் வளத்தைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நிலையான விவசாயத்தை உறுதி செய்தல் ஆகிய நான்கு முக்கிய நோக்கங்களை அமைச்சர் கோடிட்டுக் காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135232
*****
AD/RB/DL
(Release ID: 2135272)