மக்களவை செயலகம்
உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா தமது இளையோர் சக்தியால் உலகிற்கு தலைமை வகிக்கிறது: மக்களவை தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
09 JUN 2025 5:44PM by PIB Chennai
இந்தியா தமது இளையோர்களின் திறமை மற்றும் திறன் மூலம் உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண்பதில் தலைமை வகிப்பதாக மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா இன்று தெரிவித்தார். ஜோத்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் இளைஞர்கள் நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளனர் என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்காக சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துமாறு அவர்களை ஊக்குவித்தார். நவீன அறிவியலின் இரட்டை பலங்களையும் அதன் வளமான ஆன்மீக பாரம்பரியத்தையும் பயன்படுத்தி இந்தியா உலக அரங்கில் முன்னேறுவதாக கூறினார்.
இந்திய இளைஞர்கள் தற்போது வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை அளிப்பவர்களாக முன்னேறி வருவதாகவும், இந்த மாற்றத்தில் ஐஐடி-கள் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் புத்தொழில் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதிலும், பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதிலும் ஐஐடி-யைச் சேர்ந்த பட்டதாரிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். திறன் மற்றும் புதுமையான சிந்தனைகளை கொண்டுள்ள இந்திய இளைஞர்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய தேவை இருப்பதாகவும் அவர் கூறினார். 'வளர்ச்சியடைந்த இந்தியா' பாதையில் நாட்டின் பயணத்தில் இந்திய இளைஞர்கள் தீவிர பங்குதாரர்களாக மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில், ஜோத்பூரில் உள்ள ஐஐடியின் அதிநவீன விரிவுரை மண்டப வளாகம் - II ஐ திரு பிர்லா இன்று திறந்து வைத்தார்.
பொம்மைகளை தயாரிப்பதில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வது வரை, பல்வேறு துறைகளில் தன்னிறைவை அடைவதில் இந்தியாவின் வெற்றியை திரு பிர்லா எடுத்துரைத்தார். இந்தியாவின் மின்னணு சூழல் அமைப்புடன் இணைந்து, இத்தகைய முயற்சிகள், தற்சார்பு இந்தியாவிற்கான நமது உறுதிப்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளித்துள்ளன என்று திரு பிர்லா குறிப்பிட்டார்.
நாட்டில் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவதில் ஐஐடி-களின் பங்களிப்பை பாராட்டிய மக்களவை தலைவர், நாட்டில் உள்ள ஒவ்வொரு கல்லூரியும் பல்கலைக்கழகமும் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் திறன் மையமாக மாற முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135176
***
AD/TS/IR/LDN/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2135219)
வருகையாளர் எண்ணிக்கை : 19