வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறைக்கடத்தி, மின்னணு உதிரி பாகங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சிறப்பு பொருளாதார மண்டல நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் அறிவிப்பு

Posted On: 09 JUN 2025 4:10PM by PIB Chennai

குறைக்கடத்தி, மின்னணு உதிரி பாகங்களின் உற்பத்தியை  அதிகரிக்கும் வகையில்  சிறப்பு பொருளாதார மண்டலங்களின் செயல்பாடுகள் தொடர்பான விதிமுறைகளில் மத்திய அரசு    சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் துறைகளின் உற்பத்தியானது அதிக அளவிலான முதலீடுகள் மற்றும் இறக்குமதிகளைச் சார்ந்துள்ளது. எனவே இந்தப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும்சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறப்பு பொருளாதார மண்டலம் 2006-ன் விதிகளின் பிரிவு 5-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்குப் பிறகு, குறைக்கடத்திகள் அல்லது மின்னணு உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு குறைந்தபட்சம் 10 ஹெக்டேர்  நிலப்பரப்பு தேவைப்படுகிறது. இது முந்தைய விதிகளின்படி 50 ஹெக்டேர் என்ற  நிலையிலிருந்து 10 ஹெக்டேராக குறைக்கப்பட்டுள்ளது. விதி எண் 7-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சிறப்பு பொருளாதார மண்டலம் அமைந்துள்ள நிலம் மத்திய, அல்லது மாநில அரசுகள்  அல்லது அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அடமானமாகவோ அல்லது குத்தகைக்கு விடப்பட்டிருந்தால் அத்தகைய நிலங்களுக்கு இந்த விதி விலக்கு அளிக்க வகைசெய்கிறது.

திருத்தப்பட்ட விதி எண் 53-ன்படி, இலவசமாகப் பெறப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட பொருட்களின் மதிப்பை நிகர அந்நியச் செலாவணி (NFE) கணக்கீடுகளில் சேர்க்க அனுமதிக்கும் மற்றும் பொருந்தக்கூடிய சுங்க மதிப்பீட்டு விதிகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்படும். மேலும், குறைக்கடத்தி, மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தித் துறையில்  சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு பொருந்தக்கூடிய வரிகளை செலுத்திய பிறகு உள்நாட்டில்  விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் விதி எண் 18-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2135116

***

AD/TS/SV/AG/KR


(Release ID: 2135174) Visitor Counter : 2