புவி அறிவியல் அமைச்சகம்
நார்வேயின் சர்வதேச மேம்பாட்டு அமைச்சர் ஆஸ்மண்ட் க்ரோவர் ஆக்ரஸ்ட், புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்தார்
प्रविष्टि तिथि:
08 JUN 2025 7:07PM by PIB Chennai
கடல்சார் இடம் திட்டமிடல் நிகழ்விற்கு முன்னதாக, நார்வேயின் சர்வதேச மேம்பாட்டு அமைச்சர் ஆஸ்மண்ட் க்ரோவர் ஆக்ரஸ்ட், இந்தியாவின் புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்து, சமீபத்திய வாரங்களில் ஜம்மு & காஷ்மீரில் நடந்த மோசமான நிகழ்வுகளின் பின்னணியில், இந்தியாவின் ஒற்றுமைக்கு தனது நாட்டின் ஆதரவைத் தெரிவித்தார்.
டாக்டர் ஜிதேந்திர சிங் நார்வேயின் ஆதரவை ஏற்றுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் நார்வே வருகையை ஆவலுடன் எதிர்நோக்குவதாக அமைச்சர் அக்ரஸ்ட் கூறினார்.
சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து நார்வே தரப்பிலிருந்து, இந்தியாவிற்கான தெளிவான ஆதரவு வெளிப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு ஆதரவாக நார்வேயில் மக்கள் மத்தியில் வலுவான உணர்வு இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தங்கள் நாட்டிற்கு வருகை தருவதைக் காண பல மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் நார்வே அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135015
***
(Release ID: 2135015)
AD/TS/PKV/DL
(रिलीज़ आईडी: 2135020)
आगंतुक पटल : 14