எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் வட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடனான மண்டல அளவிலான மின்சார கருத்தரங்கம் சண்டிகரில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 06 JUN 2025 5:30PM by PIB Chennai

மத்திய  மின்சார அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் வட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடனான மண்டல அளவிலான  மின்சார கருத்தரங்கம் இன்று (ஜூன் 06-ம் தேதி) சண்டிகரில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில், ஹரியானா மாநில எரிசக்தித்துறை அமைச்சர் திரு அனில் விஜ், பஞ்சாப் மாநில மின்துறை அமைச்சர் திரு ஹர்பஜன் சிங், உத்தராகண்ட் மாநில வனத்துறை அமைச்சர் திரு சுபோத் உனியல், உத்தரப் பிரதேச மாநில எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஏ கே சர்மா, தில்லி மின்துறை அமைச்சர் திரு ஆஷிஷ் சூட், ஜம்மு-காஷ்மீர் மாநில ஜல் சக்தி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஜாவேத் அகமது ராணா மற்றும் ராஜஸ்தான் எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஹீராலால் நாகர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய மின்துறை செயலாளர், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் செயலாளர்கள் (மின்சாரம்/எரிசக்தி), மத்திய-மாநில மின்துறை பயன்பாட்டு வசதிகளின் தலைமை இயக்குநர்கள் மற்றும் மின்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் நாட்டின் மின்துறை கட்டமைப்பு தேசிய  அமைப்பாக பரிணமித்துள்ளதாகவும், 'ஒரே நாடு-ஒரே மின்துறை' என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையிலும், நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் நவீனமுறையிலான சாத்திய கூறுகள் கொண்ட மின்துறையின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டினார். 2024-ம் ஆண்டு மே மாதத்தில் 250 ஜிகாவாட் என்ற உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்ததாகவும், இந்தியா தற்போது மின்  மிகை நாடாக உருவெடுத்துள்ளது என்றும் நாட்டின் உச்சபட்ச மின்பற்றாக்குறை பூஜ்ஜியமாக உள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை அடைவதில் மத்திய- மாநில அரசுகளுக்கு இடையே தொடர் ஒத்துழைப்பு அவசியம் என்று திரு மனோகர்லால் வலியுறுத்தினார்.

---

(Release ID: 2134584)

AD/TS/VS/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2134661) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi