ஆயுஷ்
சர்வதேச யோகா தினம் 2025: அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரிகளின் திறன் மேம்பாட்டுக்கான பயிலரங்கு
प्रविष्टि तिथि:
06 JUN 2025 11:37AM by PIB Chennai
11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி தடையற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் ஒரு முக்கிய அம்சமாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து, உயர்நிலை மெய்நிகர் பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து 400க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்கள் குறித்த பொதுவானக் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் ஐ. நா சபையால் யோகாவுக்கு உலகளாவிய அங்கீகாரம் அளிக்கப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பத்து ஆண்டுகாலப் பயணம் நிறைவுற்றுள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா தலைமையில் இந்தப் பயிலரங்கு நடைபெற்றது. இதில் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். "ஒரே பூமி, ஒரே சுகாதாரத்திற்கான யோகா" என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டிற்கான யோகா தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு சி. செந்தில் ராஜன், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி மோனலிசா டாஷ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இந்தப் பயிலரங்கில் உரையாற்றினர்.
இந்தப் பயிலரங்கில் தொடக்கவுரையாற்றிய ஆயுஷ் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா, பிரதமரின் தொலைநோக்குப் பார்வை, சர்வதேச யோகா தினத்தின் வளர்ந்து வரும் உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான ஒருங்கிணைப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று கூறினார். "சர்வதேச யோகா தினம் நலவாழ்வு, ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கான பத்தாண்டு கால வலுவான தேசிய இயக்கமாகும் என்று அவர் எடுத்துரைத்தார். நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ள மக்களை சென்றடையும் வகையில் யோகா தினக் கொண்டாட்டங்கள் வாய்ப்பாக அமைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். பொது சுகாதார மாற்றம் மற்றும் கலாச்சாரம் ஆகிய இரண்டிற்கும் யோகா ஒரு தளமாக மாறியுள்ளது என்றும், நோய்த் தடுப்பு, சுகாதாரம், முழுமையான நல்வாழ்வுக்கான நடவடிக்கைகளில் இந்தியா முன்னணி நாடாக நிலைநிறுத்திக்கொள்ள யோகா உதவிடுகிறது என்று அவர் கூறினார்.
***
(Release ID: 2134454)
AD/TS/VS/AG/KR
(रिलीज़ आईडी: 2134485)
आगंतुक पटल : 8