சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய தலைநகர் பகுதி முழுவதும் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு தூய்மையான இயக்கத்தை காற்று தர மேலாண்மை ஆணையம் கட்டாயப்படுத்துகிறது

Posted On: 04 JUN 2025 7:01PM by PIB Chennai

தேசிய தலைநகர் பகுதி (என்சிஆர்)முழுவதும் காற்று மாசுபாட்டிற்கு போக்குவரத்துத் துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது. இது  ஆண்டு முழுவதும் தொடர்வதுடன் குளிர்காலத்தில் மிகவும் மோசமாக உள்ளது. எனவே தில்லி-என்சிஆர்-இல் திறமையான மற்றும் தூய்மையான இயக்கத்திற்கு விரைவான மாற்றம் அவசியம்.

வாகனத் துறையில், வணிக வாகனங்கள் அதிக தூரம் பயணிப்பது/மைலேஜ் காரணமாகவும், சில சமயங்களில் அதிக சுமை, மோசமான பராமரிப்பு போன்ற காரணங்களாலும் உமிழ்வை கணிசமாக அதிகரிக்கின்றன.

தில்லியில் பதிவுசெய்யப்பட்ட வணிக வாகனங்களில் மின்னணு இயக்கத்தை மேம்படுத்துவதற்காக, தில்லி தேசிய தலைநகர் பிரதேச அரசின் போக்குவரத்துத் துறை, தில்லி மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் மற்றும் விநியோக சேவை வழங்குநர் திட்டம், 2023 ஐ அறிவித்தது. தில்லியின் தேசிய தலைநகர் பிரதேசத்தில் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மூலம் உட்பட  பயணிகள் போக்குவரத்து சேவைகள்பொருட்கள் மற்றும் பொருட்களின் விநியோக சேவைகளை வழங்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு உரிமம் வழங்கி ஒழுங்குமுறைகளை வகுப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்றபிற என்சிஆர் மாநிலங்களுக்கும், முழு என்சிஆர்-க்கும் மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர்கள், விநியோக சேவை வழங்குநர்கள் மற்றும் மின்னணு வர்த்தக நிறுவனங்களை உள்ளடக்கிய விரிவான கொள்கைகளை வகுக்க வேண்டும். குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட், நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட வாகன அடர்த்தி மிகுந்த நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவை நகரத்திற்குள் தேவைகளைத் தவிர, நகரங்களுக்கு இடையேயான வாகன இயக்கத்தையும் பெரிதும் நம்பியுள்ளன.

பேட்டரி மின்சார வாகனங்கள் போன்ற பூஜ்ஜிய உமிழ்வு வாகனங்கள் மற்றும் இதுபோன்ற பிற சுத்தமான தொழில்நுட்பங்கள் மேற்கண்ட சேவைகளில் தூய்மையான இயக்கத்திற்கு இலக்காக இருக்க வேண்டும் என்றாலும், வழக்கமான டீசல்/பெட்ரோல் வாகனங்களிலிருந்து சுத்தமான இயக்க முறைகளுக்கு அவசரமாக மாற வேண்டிய அவசியம் உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133905

 

***

(Release ID: 2133905)


AD/RB/DL


(Release ID: 2133960)
Read this release in: English , Urdu , Hindi