கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜ் கபூர் 100-ம் ஆண்டு: ஒரு நடிகர் என்பதைத் தாண்டி நாகரிகத்தின் கண்ணாடியாகத் திகழ்ந்தவர்

ராஜ்கபூர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

Posted On: 02 JUN 2025 9:25PM by PIB Chennai

இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் சார்பில் புது தில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் மறைந்த நடிகர் ராஜ்கபூரின் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது.

‘ஷப்தாஞ்சலி: ராஜ் கபூர் - 'தி ஐடியா ஆஃப் ஷோமேன்ஷிப்' என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிக்கிமின் முன்னாள் ஆளுநர் திரு பி.பி. சிங், நாடாளுமன்ற உறுப்பினர் திரு மனோஜ் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.

நடிகர் ராஜ் கபூர் இளம் தலைமுறையினரிடையே திரைப்பட ஆர்வத்தைத் தூண்டினார் எனவும், ராஜ் கபூர் திரைப்பட கலைஞராக மட்டுமல்லாமல் கலைகளை ஊக்குவித்ததாகவும் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் உறுப்பினர் செயலாளர் டாக்டர் சச்சிதானந்த் ஜோஷி  இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

சிக்கிம் முன்னாள் ஆளுநர் திரு பி.பி. சிங், பேசுகையில், சினிமா மூலம் தார்மீக நெறிகளை வெளிப்படுத்திய ராஜ்கபூரின் திறனைப் பாராட்டினார், திரு மனோஜ் திவாரி பேசுகையில், "ஒரு தலைமுறையின் சினிமா மனசாட்சி" என ராஜ்கபூரை குறிப்பிட்டார். ராஜ் கபூரின் மரபு அவரது அன்பு, கண்ணியம் ஆகியவற்றில் உள்ளது என்று அவர் கூறினார்.

ராஜ் கபூர் நூற்றாண்டு விழா 2025-ம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள், அவர் தொடர்பான நினைவலைகளை பகிர்ந்துகொள்ளும் விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் போன்றவை  நாடுமுழுவதும் நடத்தப்படுகிறது.

***

(Release ID: 2133436)

AD/SM/PLM/AG/KR

 


(Release ID: 2133542) Visitor Counter : 2