மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

2025 ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை பிரேசிலின் பிரேசிலியாவில் நடைபெறும் 11-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய நாடாளுமன்றக் குழுவினர் மக்களவைத் தலைவர் தலைமையில் கலந்து கொள்வார்கள்

Posted On: 30 MAY 2025 4:00PM by PIB Chennai

2025 ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெறும் 11-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில்  பங்கேற்கும் இந்திய நாடாளுமன்றக் குழுவை, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தலைமை ஏற்று வழிநடத்துவார். இந்தக் குழுவில் மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், மாநிலங்களவை உறுப்பினர் திரு சுரேந்திர சிங் நாகர், மக்களவை உறுப்பினர்கள்  திரு விஜய் பாகேல், திரு விவேக் தாக்கூர், டாக்டர் ஷபரி பைரெட்டி, மக்களவை செயலாளர் திரு உத்பால் குமார் சிங் மற்றும் மாநிலங்களவை செயலாளர் திரு பி.சி. மோடி ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர்.

நிலையான, உலகளாவிய நிர்வாகத்தை உருவாக்குவதில் பிரிக்ஸ் நாடாளுமன்றத்தின் பங்கு என்ற கருப்பொருளின் கீழ் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, இந்தோனேசியா மற்றும் ஈரான் உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளும்  சிறப்பு  அழைப்ப நாடுகளான பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, நைஜீரியா, மலேசியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைமை அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பங்கேற்கிறார்கள்.

2025 ஜூன் 3 அன்று பிரிக்ஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின்  கூட்டம் நடைபெறுகிறது. மேலும் பிரிக்ஸ் நாடாளுமன்றங்களின் சர்வதேச விவகாரங்களுக்கான குழுக்களின் தலைவர்கள் கூட்டமும் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132703

---

AD/TS/GK/KPG/SG/DL


(Release ID: 2132845) Visitor Counter : 2