ஊரக வளர்ச்சி அமைச்சகம்
‘பதிவு மசோதா 2025’ வரைவு குறித்து பரிந்துரைகளை பொதுமக்களிடமிருந்து 30 நாட்களுக்குள் நில வளத்துறை வரவேற்கிறது
प्रविष्टि तिथि:
27 MAY 2025 11:59AM by PIB Chennai
மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளத்துறை, நவீனமிக்க, ஆன்லைன் வழி, காகிதமற்ற மற்றும் குடிமக்களுக்கு உகந்த ‘பதிவு மசோதா 2025’ என்ற வரைவைத் தயாரித்துள்ளது. இது அரசியலமைப்பிற்கு முந்தைய பதிவுச் சட்டம், 1908-க்கு மாற்றாக அமையும்.
பதிவுச் சட்டம், 1908, இந்தியாவில் ஆவணப் பதிவு முறையில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. அசையாச் சொத்து மற்றும் பிற பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களைப் பதிவு செய்வதற்கான சட்ட அடிப்படையை இது வழங்குகிறது. காலப்போக்கில், பொது மற்றும் தனியார் பரிவர்த்தனைகளில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் பங்கு கணிசமாக வளர்ந்துள்ளது. இது பெரும்பாலும் நிதி, நிர்வாகம் மற்றும் சட்ட முடிவெடுப்பதற்கான அடிப்படையை உருவாக்குகிறது. எனவே பதிவு செயல்முறை வலுவானதாகவும், நம்பகமானதாகவும், வளர்ந்து வரும் சமூக மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் திறன் கொண்டதாகவும் இருப்பது அவசியமாகும்.
அண்மை ஆண்டுகளில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, வளர்ந்து வரும் சமூக-பொருளாதார நடைமுறைகள் மற்றும் உரிய விடாமுயற்சி, சேவை வழங்கல் மற்றும் சட்ட தீர்ப்புக்காக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை நம்பியிருப்பது அதிகரித்து வருவது ஆகியவை எதிர்காலத்திற்கு ஏற்ப பதிவு தொடர்பான கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது. பல மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஏற்கனவே உள்ள 1908-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் ஆன்லைன் ஆவண சமர்ப்பிப்பு மற்றும் மின்னணு அடையாள சரிபார்ப்பு போன்ற புதுமைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும், பதிவு செய்யும் அதிகாரிகளின் பதவிகள் மற்றும் பொறுப்புகளை தெளிவாக வரையறுப்பது முக்கியமானதாகும். இதனால் அவர்கள் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க பதிவு செயல்முறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த முடியும். இதன் அடிப்படையில் 2025 பதிவு மசோதா, இந்த தொலைநோக்கு பார்வையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
'பதிவு மசோதா, 2025' வரைவு, நில வளத் துறையின் https://dolr.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது, பொதுமக்கள் 30 நாட்களுக்குள் (25.06.2025 அன்று அல்லது அதற்கு முன்) இந்த வரைவு மசோதா குறித்த பரிந்துரைகளை தெரிவிக்கலாம்.
****
(Release ID 2131546)
AD/TS/IR/KPG/RJ
(रिलीज़ आईडी: 2131589)
आगंतुक पटल : 103