பாதுகாப்பு அமைச்சகம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு: தேசிய கூட்டு மலையேறும் குழு எவரெஸ்ட் சிகரத்தை எட்டியது
Posted On:
25 MAY 2025 12:48PM by PIB Chennai
நாட்டின் முதன்மையான மலையேற்ற நிறுவனங்களான பஹல்காமில் உள்ள ஜவஹர் மலையேற்ற நிறுவனம் மற்றும் குளிர்கால விளையாட்டு நிறுவனம், உத்திரகாசி நேரு மலையேற்ற நிறுவனம், டார்ஜிலிங் ஹிமாலயன் மலையேற்ற நிறுவனம், ஆகியவற்றின் பயிற்றுநர்களைக் கொண்ட கூட்டுப் பயணக் குழு, மே 23, 2025 அன்று எவரெஸ்ட் சிகரத்தை (8,848.86 மீ) வெற்றிகரமாக அடைந்தது.
புது தில்லியில் 2025, மார்ச் 26 அன்று பாகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் கொடியசைத்துத் தொடங்கி வைத்த இந்தப் பயணத்திற்கு உத்தரகாசியின் நேரு மலையேற்ற நிறுவன முதல்வர் கர்னல் அன்ஷுமான் பதௌரியா, பஹல்காமின் ஜவஹர் மலையேற்ற நிறுவனம் மற்றும் குளிர்கால விளையாட்டு நிறுவன முதல்வர் கர்னல் ஹேம் சந்திர சிங் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த உயர்மட்டக் குழு, திரு ராஜேந்திர முகியா, திரு ராகேஷ் சிங் ராணா, திரு. பசாங் டென்சிங் ஷெர்பா, திரு துப்ஸ்தான் த்சேவாங் ஆகிய ஐந்து பயிற்றுனர்களை உள்ளடக்கியது .
கடுமையான வானிலை மற்றும் மிக உயர நிலைகளை எதிர்கொண்டபோதும், மலையேறுபவர்கள் அசாத்திய தைரியம், உறுதி மற்றும் கூட்டுப்பணியை வெளிப்படுத்தினர். இந்தியாவின் மலையேற்ற வரலாற்றில் ஒரு புதிய சாதனையை உருவாக்கினர். எவரெஸ்ட் அடிவார முகாமில் பாதுகாப்பாக இறங்கிய குழு, இப்போது காத்மாண்டு செல்கிறது.
******
(Release ID: 2131086)
TS/SMB/SG
(Release ID: 2131140)