பாதுகாப்பு அமைச்சகம்
லைபீரிய கொள்கலன் கப்பல் கொச்சியில் திடீரென சாய்ந்தது; இந்திய கடலோர காவல்படை, மீட்பு நடவடிக்கைகளை வழிநடத்துகிறது
Posted On:
24 MAY 2025 8:31PM by PIB Chennai
லைபீரிய கொள்கலன் கப்பலான MSC ELSA 3, மே 24, 2025 அன்று கொச்சியிலிருந்து தென்மேற்கே சுமார் 38 கடல் மைல் தொலைவில் 26-டிகிரி சாய்ந்ததை அடுத்து, இந்திய கடலோர காவல்படை மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. மே 23 அன்று விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு கொச்சிக்கு கப்பல் சென்று கொண்டிருந்தபொது , இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்திய கடலோர காவல்படை, ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது, கப்பல்கள் மற்றும் விமானங்களை பாதிக்கப்பட்ட கப்பலின் இடத்திற்கு அனுப்பியது. கப்பலில் இருந்த 24 பணியாளர்களில், ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளனர், மீதமுள்ள 15 பணியாளர்களை வெளியேற்றும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்திய கடலோர காவல்படை விமானங்கள் கூடுதல் உயிர்காக்கும் ராஃப்ட்களை இறக்கின. இந்திய கடலோர காவல்படை உடன் ஒருங்கிணைந்து, கப்பல் போக்குவரத்து இயக்குநரகம், அவசரகால மீட்பு உதவிகளை வழங்குமாறு கப்பல் மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2130988
****
(Release ID: 2130988)
SM/BK/SG
(Release ID: 2131136)