திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்குப் பகுதி நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் புதிய மையமாக மாறியுள்ளது: மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி

Posted On: 24 MAY 2025 5:30PM by PIB Chennai

வடகிழக்குப் பகுதி இந்தியாவின் புற எல்லையாக மட்டும் இருந்த நிலை மாறி அது இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் புதிய மையமாக இப்போது மாறியுள்ளது என்று மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி கூறியுள்ளார்புதுதில்லியில் நடைபெற்ற எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ல் பேசிய அவர் இந்தப் பிராந்தியத்திற்காக இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய முதலீட்டு மாநாடாக இந்த உச்சிமாநாடு அமைந்துள்ளது என்றார். உலகளாவிய முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்முனைவோர் உட்பட பலரை அது ஒன்றிணைத்துள்ளது என அவர் கூறினார்.

கல்வி முதல் தொழில்முனைவோர் வரை: வடகிழக்கின் பிரகாசமான திறனைப் பயன்படுத்துல் என்ற தலைப்பில் ஒரு முக்கிய அமர்வில் பேசிய அமைச்சர் வடகிழக்குப் பகுதி, இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஒரு துடிப்பான சக்தியாக இருக்கும் என்று கூறினார்.

வடகிழக்குப் பகுதி, முன்னேற்றத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது எனவும் இந்த ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். பொருளாதார திட்டமிடல்களில் முன்பு வரலாற்று ரீதியாக குறைவாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இந்தப் பகுதிக்கென இப்போது தனித்துவமான உச்சிமாநாடு நடத்தப்படுவதாகவும் இது இந்த அரசின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது எனவும் அவர் கூறினார்சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கும், உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை உருவாக்குவதற்கும், முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை திரு ஜெயந்த் சௌத்ரி எடுத்தரைத்தார்.

இந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக அரங்கம், வடகிழக்கின் தொழில்முனைவோர் உணர்வை வெளிப்படுத்தியது.

*****

 

(Release ID: 2130951)

SM/PLM/SG

 

 


(Release ID: 2130956)