பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
ஊராட்சிகள் முன்னேற்ற குறியீடு 2.0 வெளியீடு தொடர்பாக இரண்டு நாள் தேசிய எழுத்துப் பயிலரங்கம் புது தில்லியில் நடைபெறுகிறது
Posted On:
24 MAY 2025 4:01PM by PIB Chennai
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஊராட்சிகள் (பஞ்சாயத்து) முன்னேற்ற குறியீட்டின் இரண்டாவது பதிப்பு குறித்த இரண்டு நாள் தேசிய எழுத்துப் பயிலரங்கத்தை மே 26-27 தேதிகளில் புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஏற்பாடு செய்துள்ளது. 2023–24 நிதியாண்டிற்கான தேசிய ஊராட்சிகள் முன்னேற்றக் குறியீடு வெளியீடு தொடர்பாக இந்த எழுத்துப் பயிலரங்கம் (Writeshop) நடைபெறுகிறது. குறிக்கிறது. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மூலம் கிராமப்புறங்களில் முழுமையான, உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்டு கிராம பஞ்சாயத்து நிலையில் தரவு அடிப்படையிலான கண்காணிப்புக்கும் திட்டமிடலுக்குமான திறன்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொடக்க அமர்வில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் திரு சௌரப் கார்க், கூடுதல் செயலாளர் திரு சுஷில் குமார் லோஹானி; நிதி ஆயோக்கின் மூத்த ஆலோசகர் திரு ராஜீப் குமார் சென், பிற மூத்த அதிகாரிகள், நிபுணர்கள் கலந்து கொள்வார்கள்.
உள்ளூர்மயமாக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணைந்த ஒன்பது கருப்பொருள்களில் கிராம பஞ்சாயத்துகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் ஊராட்சிகள் (பஞ்சாயத்து) முன்னேற்ற குறியீடு ஒரு வலுவான, பல பரிமாண கருவியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பொருள்கள் வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, நீர் மேலாண்மை, தூய சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, நிர்வாகம், சமூக நீதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது.
முதலாவது ஊராட்சிகள் (பஞ்சாயத்து) முன்னேற்ற குறியீடு (நிதியாண்டு 2022–23) ஒரு அடிப்படை மதிப்பீட்டு கருவியாக செயல்பட்டாலும், இந்த இரண்டாவது குறியீடு விரிவான கள அனுபவம் கருத்துகளின் அடிப்படையில் முக்கிய மேம்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
பஞ்சாயத்து ராஜ், சுகாதாரம், கல்வி, கிராமப்புற மேம்பாடு, பெண்கள் - குழந்தைகள் மேம்பாடு ஆகிய துறைகளின் மூத்த அதிகாரிகள், நித்தி ஆயோக், திட்ட அமலாக்க அமைச்சகம், தேசிய தகவல் மையம், யுனிசெஃப் போன்றவற்றின் தொழில்நுட்பக் குழுக்கள் உட்பட 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்த எழுத்துப் பயிலரங்கில் (Writeshop) பங்கேற்கும்.
மொழியியல் உள்ளடக்கம், தேசிய அளவிலான வெளிப்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்க, இந்த நிகழ்வு அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 11 இந்திய மொழிகளில் நேரலையில் இடம்பெறும்.
******
(Release ID: 2130937)
SM/PLM/SG
(Release ID: 2130945)