தேர்தல் ஆணையம்
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு மொபைல் போன் பாதுகாப்பு வசதியை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது
Posted On:
23 MAY 2025 6:05PM by PIB Chennai
வாக்காளர்களின் வசதியை மேம்படுத்துதல் மற்றும் வாக்குச்சாவடி நாள் ஏற்பாடுகளை நெறிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு இணங்க, வாக்குச்சாவடிகளுக்கு வெளியே வாக்காளர்களுக்கு மொபைல் போன் பாதுகாப்பு வசதியை வழங்குவதற்கும், பிரச்சாரத்திற்கான விதிமுறைகளை நெறிப்படுத்தவும் தேர்தல் ஆணையம் மேலும் இரண்டு விரிவான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த வழிமுறைகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1951 மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் 1961 ஆகியவற்றின் தொடர்புடைய விதிகளுக்கு இணங்க உள்ளன.
நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தேர்தல் நாளில் மொபைல் போன்களை பாதுகாப்பதில் எதிர்கொள்ளும் சவால்களை அங்கீகரித்து, வாக்குச்சாவடிகளுக்கு வெளியே மொபைல் போன் பாதுகாப்பு வசதியை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் மட்டுமே மொபைல் போன்கள் அனுமதிக்கப்படும். அதுவும் சுவிட்ச்-ஆஃப் செய்யப்பட்டிருக்க வேண்டும். வாக்குச்சாவடியின் நுழைவாயிலுக்கு அருகில் மிகவும் எளிமையான பெட்டிகள் அல்லது சணல் பைகள் வைக்கப்படும். அங்கு வாக்காளர்கள் தங்கள் மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும். வாக்காளர்கள் மொபைல் போன்களை வாக்குச்சாவடிக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், பாதகமான உள்ளூர் சூழ்நிலைகளின் அடிப்படையில், தேர்தல் நடத்தும் அதிகாரி சில வாக்குச்சாவடிகளுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கலாம். வாக்குச்சாவடிக்குள் வாக்களிப்பதன் ரகசியத்தை உறுதி செய்யும் தேர்தல் நடத்தை விதிகள்- 1961-ன் விதி 49எம் தொடர்ந்து கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
மேலும், தேர்தல் நாளில் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையாக, தேர்தல் சட்டங்களின்படி வாக்குச்சாவடியின் நுழைவாயிலிலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு பிரச்சாரம் செய்வது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்குச்சாவடி நாளில் வாக்குச்சாவடியைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் தேர்தல் பிரச்சாரம் அனுமதிக்கப்படாது.
தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கான வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து புதுமைகளை உருவாக்குகிறது.
***
(Release ID: 2130795)
SG/TS/PLM/RR/DL
(Release ID: 2130840)