தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் தொழில்நுட்ப சக்தியாக வடகிழக்குப் பகுதி உருவெடுத்துள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர்

Posted On: 23 MAY 2025 5:38PM by PIB Chennai

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர் இன்று, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற எழுச்சிமிகு வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025- இல் உரையாற்றினார். வடகிழக்குப் பகுதி இந்தியாவின் எல்லை அல்ல எனவும், மாறாக அதன் கட்டமைப்புகளும், தொழில்நுட்பமும் பாரம்பரியத்துடன் வளர்ச்சியை இணைப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

2014-க்குப் பிறகு வடகிழக்கு பிராந்தியத்தின்  வளர்ச்சிப் பயணத்தை எடுத்துரைத்த டாக்டர் சந்திர சேகர், இந்த முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையே காரணம் என்று கூறினார். இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையின் ஒரு முக்கியப்பகுதி இதுவாகும் என்று அவர் கூறினார்.

எட்டு பன்முகத்தன்மை கொண்ட அஷ்டலட்சுமி மாநிலங்களைக் கொண்ட வடகிழக்குப் பகுதி, டிஜிட்டல் இடைவெளியிலிருந்து வெளிவந்து புதுமை மற்றும் வளர்ச்சியின் துடிப்பான மையமாக மாறியுள்ளது என அவர் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில், டிஜிட்டல்  உள்கட்டமைப்பில்  வடகிழக்குப் பகுதியில் ₹1.5 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். இப்போது இந்த பிராந்தியத்தில் 90% சதவீதத்திற்கும் அதிகமானோர் 4ஜி சேவையை பயன்படுத்துவதாக திரு பெம்மசானி சந்திரசேகர் கூறினார்.

***

(Release ID: 2130781)

SG/TS/PLM/RR/DL


(Release ID: 2130831)
Read this release in: English , Khasi , Urdu , Hindi