இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்F உதவுவதற்கான விதிமுறைகளைத் திருத்தியுள்ளது

Posted On: 23 MAY 2025 4:19PM by PIB Chennai

தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான உதவி திட்டத்தின் கீழ்  தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான உதவி விதிமுறைகளிலா இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் திருத்தங்கள் செய்து உள்ளது. விதிமுறைகளின் கடைசி திருத்தம் பிப்ரவரி 2022 இல் செய்யப்பட்டிருந்தது. 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு, ஒரு புதிய ஒலிம்பிக் சுழற்சி தொடங்கியுள்ளது. இது மாறிவரும் சூழ்நிலைகளின் வெளிச்சத்தில் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் சவால்களை சமாளிப்பதற்கும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் விருப்பத்தை ஆதரிப்பதற்கும் இந்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விதிமுறைகளை திருத்தும் போது, பயிற்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, உபகரணங்கள் கொள்முதல் மற்றும் தடகள நலத் திட்டங்களுடன் தொடர்புடைய செலவினங்களில் பணவீக்கம் காரணமாக அதிகரித்த செலவுகளை அமைச்சகம் கணக்கில் எடுத்துக்கொண்டது.

பல கூறுகளுக்கான உதவியின் அளவை அதிகரிப்பதைத் தவிர, முதல் முறையாக சில புதிய நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட திட்டத்தின் கீழ், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள்  தங்கள் வருடாந்திர பட்ஜெட்டில் குறைந்தது 20% தங்கள் துணைப் பிரிவுகள் மூலம் கடைநிலை மேம்பாட்டிற்காக, குறிப்பாக ஜூனியர் மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

திருத்தப்பட்ட திட்டமானது திறன் மேம்பாட்டையும் வலியுறுத்துகிறது. திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியில் குறைந்தது 10% பயிற்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும். இந்தியாவில் பயிற்சி படிப்புகளை நடத்துதல், வெளிநாடுகளில் உள்ள இந்திய பணியாளர்களுக்கான படிப்புகள், பயிற்சி பாடத்திட்டங்களை உருவாக்குதல், மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை ஏற்பாடு செய்தல் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச சான்றிதழ் திட்டங்கள் உட்பட அத்தகைய பயிலரங்குகள்  அல்லது படிப்புகளை நடத்துவதற்கு வெளிநாட்டு அல்லது இந்திய நிபுணர்களை ஈடுபடுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

அனைத்து தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளும் பயிற்சியாளர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பயிற்சி கல்வி நிபுணரை நியமிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து அரசால் தீர்மானிக்கப்பட்டபடி, பயிற்சி இல்லாத காலங்களில் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்களின் திறனை மேம்படுத்த பயிற்றுவிக்கவும் வளர்க்கவும் வெளிநாட்டு நிபுணர்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

ரூ 10 கோடி மற்றும் அதற்கு மேல் ஆண்டு பட்ஜெட்டைக் கொண்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், விளையாட்டின் ஒட்டுமொத்த தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தை வடிவமைத்து கண்காணிப்பதற்குப் பொறுப்பான ஒரு உயர் செயல்திறன் இயக்குநரை  கட்டாயமாக நியமிக்க வேண்டும்.

உயர் முன்னுரிமை மற்றும் முன்னுரிமை விளையாட்டுத் துறைகளின் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் , சீனியர் குழு மற்றும் ஜூனியர் குழு என இரண்டு பிரிவுகளில் அதிக செயல்திறன் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களைக் கொண்ட சாத்தியமான குழுக்களை அடையாளம் காணும். இந்த சாத்தியமான குழுவின் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் அகாடமிகளுக்கு பயிற்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் ஆதரவு ஆதரவை வழங்கப்படும். விளையாட்டு அறிவியல் சேவைகள் மற்றும் சிறப்பு உபகரணங்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும்.

சாத்தியமான குழுவின் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக  அகாடமிகள் அடையாளம் காணப்பட்டு அவை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விளையாட்டுக்கும் இந்த அங்கீகாரம் பெற்ற அகாடமிகளில் வழங்கப்படும் பயிற்சித் திட்டங்கள் அந்தந்த உயர் செயல்திறன் இயக்குநரால்  கண்காணிக்கப்படும். இந்த அகாடமிகள் ஒவ்வொன்றின் இடைவெளி பகுப்பாய்வையும்  நிதியுதவிக்கான திட்டங்களில் வழங்க வேண்டும்.

முகாம் அல்லாத நாட்களில் ஒவ்வொரு குழு விளையாட்டு வீரருக்கும் மாதத்திற்கு ரூ 10,000 உணவு உதவித்தொகை வழங்கப்படும், இந்த காலகட்டங்களில் அவர்கள் சரியான ஊட்டச்சத்துடன்  இருப்பதை இந்த உதவி உறுதி செய்யும்.

தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துதல், இந்தியாவில் சர்வதேச போட்டிகளை நடத்துதல், உணவுக் கட்டணங்கள் மற்றும் பயிற்சியாளர் ஊதியம் ஆகியவற்றிற்கான நிதி உதவித் தொகை திருத்தப்பட்ட திட்டத்தின் கீழ் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துவதற்கான நிதி உதவி, தற்போதுள்ள ரூ 51 லட்சத்திலிருந்து ரூ 90 லட்சமாகவும், முன்னுரிமை விளையாட்டுகளுக்கு ரூ 75 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டில் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான நிதி உதவி இரட்டிப்பாக ரூ 2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தலைமை தேசிய பயிற்சியாளரின் சம்பளம் மாதத்திற்கு ரூ 5 லட்சத்திலிருந்து ரூ 7.5 லட்சமாகவும், மற்ற பயிற்சியாளர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ 2 லட்சத்திலிருந்து ரூ 3 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மூத்த விளையாட்டு வீரர்களுக்கு ஒரு தடகள வீரருக்கு ஒரு நாளைக்கு ரூ 690 லிருந்து ரூ 1,000 ஆகவும், ஜூனியர் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ 480 லிருந்து ரூ 850 ஆகவும் உணவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130740

***

SG/TS/PKV/KPG/DL


(Release ID: 2130802)