எரிசக்தி அமைச்சகம்
கர்நாடகாவின் மின் துறை செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர் திரு. மனோகர் லால் ஆய்வு செய்தார்
Posted On:
23 MAY 2025 2:59PM by PIB Chennai
கர்நாடகா மாநிலத்தில் மின் துறை செயல்பாடுகள் குறித்து மத்திய மின் துறை அமைச்சர் திரு மனோகர் லால் இன்று (23.05.2025) பெங்களூருவில் விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய மின் துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீபாத் நாயக்; கர்நாடகாவின் எரிசக்தித் துறை அமைச்சர் திரு கே. ஜே. ஜார்ஜ் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது, கர்நாடகாவில் மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், விநியோகத்தின் தற்போதைய நிலை குறித்து மாநில அரசு சார்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. உற்பத்தி, மின் பரிமாற்ற உள்கட்டமைப்பிற்கான வழித்தட உரிமத்தில் உள்ள சவால்கள், விநியோக உள்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மின் நிறுவனங்களின் வருடாந்திர நிதி இழப்புகளைக் குறைப்பதற்கு, நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சர் மாநில அரசை வலியுறுத்தினார். அரசுத் துறைகள் தொடர்பான நிலுவைகள், மானியங்கள் ஆகியவற்றை சரியான நேரத்தில் வழங்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். ஆகஸ்ட் 2025 க்குள் அனைத்து இடங்களிலும் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவ நடவடிக்கை வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். கர்நாடகாவில் மின் துறையை வலுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் உறுதியளித்தார்.
***
Release ID: 2130719)
SG/TS/PLM/RR/KR
(Release ID: 2130746)