தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஹரியானாவில் அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டது தொடர்பாக வெளியான செய்தியையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

Posted On: 21 MAY 2025 1:41PM by PIB Chennai

ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டது தொடர்பாக 2025 மே 20 அன்று  ஊடகங்களில் செய்திகள் வெளியானதை  தேசிய மனித உரிமைகள் ஆணையம் கருத்தில் கொண்டது.

அவர் கைது செய்யப்பட்டதற்கான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ள செய்தியின் மூலம் பேராசிரியரின் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, புகாரளிக்கப்பட்ட சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு இது பொருத்தமான வழக்கு என்று ஆணையம் கருதுகிறது.

அதன்படி, ஹரியானா காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஒரு வாரத்திற்குள் இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு கேட்டுள்ளது.

***

(Release ID: 2130188)

TS/IR/AG/KR

 


(Release ID: 2130213)