ஆயுஷ்
சர்வதேச யோகா தினம் 2025 அன்று உலகின் மிகப்பெரிய உடல்நல கொண்டாட்டத்தில் பங்கேற்க இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரை ஆயிரத்திற்கும் அதிகமான அமைப்புகள் யோகா சங்கம் இணையப்பக்கத்தில் பதிவு செய்துள்ளன
Posted On:
20 MAY 2025 6:23PM by PIB Chennai
ஒட்டுமொத்த சுகாதாரம் என்பதற்கு தேசத்தின் உறுதிப்பாட்டை எதிரொலிக்கும் விதமாக 2025 ஜூன் 21 அன்று இந்தியாவின் மிகப்பெரிய உடல்நலக் கொண்டாட்டமான சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்பதற்கு ஆயிரத்திற்கும் அதிகமான அமைப்புகள் பதிவு செய்துள்ளன என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது.
28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பள்ளிகள், கல்லூரிகள், பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், அரசுத்துறைகள், அடித்தள நிலையிலான சமூக குழுக்கள் உள்ளிட்டவை பதிவு செய்த அமைப்புகளில் அடங்கும்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தைத் தொடர்ந்து சர்வதேச யோகா தினம் ஐநா சபையால் 2015-ல் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த தினத்தின் 10-வது ஆண்டாக கொண்டாடப்படுகின்ற சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் “ஒரே பூமி, ஒரே சுகாதாரத்திற்கான யோகா” என்பதாகும்.
இந்த யோகா தினத்தில் பங்கேற்க yoga.ayush.gov.in/yoga-sangam என்ற இணைய தளத்தில் உங்களின் குழு அல்லது அமைப்பை பதிவு செய்துகொள்ளவும். 2025 ஜூன் 21 அன்று யோகா சங்கம் நிகழ்வை நடத்தி பங்கேற்பு விவரங்களை பதிவேற்றம் செய்து அதிகாரப்பூர்வ பாராட்டுச் சான்றிதழை பெற்றுக்கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2129995
***
SM/SMB/AG/DL
(Release ID: 2130019)