விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், ஐசிஏஆர் நிறுவனங்களின் இயக்குநர்கள் பங்கேற்ற வருடாந்தர மாநாட்டை மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் தொடங்கிவைத்தார்
Posted On:
20 MAY 2025 4:29PM by PIB Chennai
வேளாண் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், ஐசிஏஆர் நிறுவனங்களின் இயக்குநர்கள் பங்கேற்ற வருடாந்தர மாநாட்டை மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் இன்று புதுதில்லியின் பூசாவில் உள்ள டாக்டர் சி சுப்பிரமணியம் கலையரங்கில் தொடங்கிவைத்தார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் திரு சௌகான், வளர்ச்சியடைந்த விவசாய சங்கல்ப் இயக்கத்தில் துணைவேந்தர்கள் தங்களின் கல்வி சார்ந்த பொறுப்பாளர்களுடன் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சோதனைக் கூடத்தில் இருந்து வயல்வெளிக்கு என்ற முன்முயற்சியை உடனுக்குடன் அமலாக்குவது காலத்தின் தேவை என்று அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கு உற்பத்தி திறனை அதிகரித்தல், உற்பத்திக்கான செலவை குறைத்தல், உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலையை உறுதிசெய்தல், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுதல், வேளாண்மையில் மாற்று முறைகளை ஊக்குவித்தல், மதிப்பு கூடுதலை விரிவுபடுத்துதல் மற்றும் உணவு பதனம் என்ற வேளாண் அமைச்சகத்தின் ஆறு அம்ச உத்திகளை அவர் எடுத்துரைத்தார்.
விவசாயிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு நேரடியாக தீர்வுகளை வழங்கவும் மே 25, 26 ஆகிய தேதிகளில் தாம் நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதாக திரு சௌகான் தெரிவித்தார்.
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு பகீரத் சௌத்ரி பேசுகையில், விவசாயிகளுக்கு அதிகாரமளித்து அவர்களை வலுப்படுத்தும் போதுதான் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும் என்றார். வேளாண்மையின் நிலைத்தன்மையையும், முன்னேற்றத்தையும் உறுதிசெய்ய பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கை வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
வேளாண்துறை செயலாளரும், ஐசிஏஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் மங்கி லால் ஜாட், ஐசிஏஆர் நிறுவனத்தின் வேளாண் கல்வி துணைத்தலைமை இயக்குநர் டாக்டர் ஆர் சி அகர்வால் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2129901
***
SM/SMB/AG/KR
(Release ID: 2129937)