பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போர் விமான தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான இந்தியா, அமெரிக்கா கூட்டுப்பணிக்குழுவின் 8-வது கூட்டம்

Posted On: 20 MAY 2025 4:16PM by PIB Chennai

இந்தியா- அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சி திட்டத்தின் கீழ்  அமைக்கப்பட்ட போர் விமான தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான இந்தியா, அமெரிக்கா கூட்டுப்பணிக்குழுவின் 8-வது கூட்டத்திற்கு 2025 மே 13 முதல் 16 வரை இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.

போர் விமானங்கள் பிரிவின் திட்ட செயல் அதிகாரி ரியர் அட்மிரல் கேசி மோட்டன் தலைமையிலான 6 உறுப்பினர் அமெரிக்க தூதுக்குழு தில்லியிலும், கோவாவிலும் உள்ள பல்வேறு பாதுகாப்பு  நிறுவனங்களை பார்வையிட்டது.

புதுதில்லியில் மே 13 அன்று நடைபெற்ற கூட்டுப்பணிக்குழு கூட்டத்தின் தொடக்க அமர்விற்கு போர் விமான திட்டங்களின் உதவி கட்டுப்பாட்டாளர் ரியர் அட்மிரல் விஷால் பிஷ்னோய் இணை தலைமை வகித்தார். கடந்த 10 ஆண்டுகளில் இந்த கூட்டுப்பணிக்குழுவின் முக்கியத்துவம் மற்றும் முன்னேற்றம் குறித்து ரியர் அட்மிரல் கேசி மோட்டன் இந்தக் கூட்டத்தில் எடுத்துரைத்தார். போர் விமானங்கள் குறித்து பயனுள்ள தகவல்கள் பரிமாற்றத்தை நோக்கி கூட்டுப்பணிக்குழு மேற்கொண்ட குறிப்பிடத்தக்க பணிகளை இருதரப்பினரும் பாராட்டினர். போர் விமான தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களின் எதிர்காலத்தில் ஒத்துழைப்பது பற்றிய திட்டங்கள் விவாதிக்கப்பட்டு கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

கோவாவில் நடைபெற்ற  கூட்டத்தில் போர் விமான செயல்பாடுகள்  மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து இந்திய கடற்படையின் விமானப் பிரிவு நிபுணர்களுடன் தொழில்முறையிலான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பில் இது மேலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்திருந்தது.

***

(Release ID: 2129894)

SM/SMB/AG/KR

 


(Release ID: 2129914)