பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘செயலக சீர்திருத்தங்களின்' 21-வது பதிப்பு ஏப்ரல் 2025க்கான மாதாந்திர அறிக்கை வெளியிடப்பட்டது

Posted On: 19 MAY 2025 5:12PM by PIB Chennai

பணியாளர், பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் உள்ள நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை , ஏப்ரல் 2025-க்கான அதன் மாதாந்திர ‘செயலக சீர்திருத்தங்கள்’ அறிக்கையின் 21வது பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, (i) தூய்மைப்படுத்துதல் மற்றும் நிலுவையை குறைந்தபட்ச நிலைகளாகக் குறைத்தல் (ii) முடிவெடுப்பதில் செயல்திறனை அதிகரித்தல், (iii) மின்-அலுவலக செயல்படுத்தல் மற்றும் பகுப்பாய்வு மூலம் நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் குறித்த விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.

ஏப்ரல் 2025 அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள்:

* நாடு முழுவதும் 10,771 இடங்களில் தூய்மை இயக்கங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

* தோராயமாக 4.35 லட்சம் சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக பங்களிப்பு செய்த துறை ரயில்வே அமைச்சகம் (1,74,167 சதுர அடி) மற்றும் நிலக்கரி அமைச்சகம் (99,114 சதுர அடி) ஆகும்.

* ரயில்வே, கனரகத் தொழில்கள் மற்றும் நிலக்கரி போன்ற அமைச்சகங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுடன், கழிவுகளை அகற்றுவதன் மூலம் ரூ.129 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

* பயனுள்ள பதிவு மேலாண்மையில் 1,71,193   கோப்புகள் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டன. 1,08,838 கோப்புகள் நீக்கப்பட்டன.

* 6,42,005 பொதுமக்கள் குறைகள் தீர்க்கப்பட்டன (93.77% நீக்கப்பட்டது), 1,674 எம்பி பரிந்துரைகள், 535 மாநில அரசு பரிந்துரைகள் நீக்கப்பட்டன.

 

அமைச்சகங்களும் துறைகளும் அலுவலக இடங்களின் திறமையான மேலாண்மையை செயல்படுத்தி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொது அணுகலை மேம்படுத்தின.

இந்த முயற்சிகள் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்ட, வெளிப்படையான, திறமையான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்திற்கான மத்திய அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை  காட்டுகின்றன. இது நிர்வாக சிறப்பம்சம் மற்றும் பொறுப்புள்ள பொது நிர்வாகத்தின் பரந்த இலக்கோடு இணைகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129651

***


TS/PKV/RR/DL


(Release ID: 2129681)
Read this release in: English , Urdu , Hindi