அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சிறிய நகரங்களில் வேளாண் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக ரோபார் ஐஐடி-க்கு மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் பாராட்டு

நாட்டின் புத்தொழில் நிறுவனங்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் இப்போது அடுக்கு 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் தொடங்கப்படுகின்றன: திரு ஜிதேந்திர சிங்

Posted On: 18 MAY 2025 5:23PM by PIB Chennai

2008-ம் ஆண்டு நிறுவப்பட்ட மற்ற ஐஐடிகளுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் புதியதாக இருக்கும் ஐஐடி ரோபார், சிறிய நகரங்களில் வேளாண் புத்தொழில்களை ஊக்குவிப்பதற்காக  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார். இந்தியாவின் புத்தொழில் நிறுவனங்களில் கிட்டத்தட்ட 50 சதவீத நிறுவனங்கள் இப்போது  2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் தொடங்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் மேலும் கூறினார்.

ரோபார் ஐஐடி-யில் அறிவியல் - தொழில்நுட்பத் துறை (DST) ஆதரவுடன் நடைபெற்ற பிரகதி நிறுவனர் மன்றத்தில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் புத்தொழில் புரட்சியானது பெருநகரங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்று குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்ப முயற்சிகள் மட்டுமே புத்தொழில்களாக இருக்க முடியும் என்ற கட்டுக்கதை இப்போது மாறி வருவதாக அவர் கூறினார். பாரம்பரிய துறைகளை மாற்றுவதன் மூலம் அதிக திறன் கொண்ட வேளாண் புத்தொழில்களை ஊக்குவித்ததற்காக ஐஐடி ரோபாரை அவர் பாராட்டினார். இந்த மாற்றம் ஆழமாக வேரூன்றிய கண்டுபிடிப்புகளின் ஆரோக்கியமான அறிகுறியாகும் என்றும் அவர் கூறினார்இந்தியா முழுவதும் தொழில்முனைவோரை பிரதமர் திரு நரேந்திர மோடி ஊக்குவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

 உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவை முன்னேற்றுவதில் புத்தொழில்களின் பங்கை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக் காட்டினார். உலகளாவிய புத்தாக்க கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 81-வது இடத்திலிருந்து 39-வது இடத்திற்கு உயர்ந்ததை எடுத்துரைத்த அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின் பங்கை சுட்டிக்காட்டினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதில் வேளாண் துறையில் புதுமைத் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும் எனவும் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

******

 

(Release ID: 2129446)

TS/PLM/SG

 


(Release ID: 2129477)
Read this release in: Urdu , English , Hindi , Punjabi