மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
திரிபுரா மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம்,மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மின்-ஆளுமைப் பிரிவுடன் இணைந்து, “நல்லாட்சிக்கான செயற்கை நுண்ணறிவு: வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்துதல்” என்ற தலைப்பில் மாநில அளவிலான பயிலரங்கை நடத்தியது
Posted On:
17 MAY 2025 2:12PM by PIB Chennai
பொது நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஏற்றுக்கொள்ளப்படுவதை விரைவுபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியாக, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மின்-ஆளுமைப் பிரிவுடன் இணைந்து, திரிபுரா மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம், 2025 - ம் ஆண்டு மே 16 - ம் தேதி அகர்தலாவில் உள்ள பிரக்னா பவனில் “நல்லாட்சிக்கான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்: வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்துதல்” என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கை நடத்தியது.
தேசிய நிர்வாக அமைப்பின் திறன் மேம்பாட்டு முயற்சியின் முக்கிய அங்கமாக நடத்தப்பட்ட இந்தப் பயிலரங்கம், திரிபுரா மாநில அரசின் மூத்த அதிகாரிகளிடையே நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்த புரிதலையும், அதனை ஏற்றுக்கொண்டு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பயிலரங்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இது டிஜிட்டல் மாற்றம் மற்றும் பொது நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கான அம்மாநிலத்தின் கூட்டு அர்ப்பணிப்பு உணர்வைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
இந்தப் பயிலரங்கில் வரவேற்பு உரையாற்றிய திரிபுரா மாநில அரசின் தகவல் தொழில்நுட்பச் செயலாளர் திரு. கிரண் கிட்டே நிர்வாக செயல்பாடுகளில் ஒரு முன்னுதாரணமான புரட்சியை ஏற்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளதாகச் சுட்டிக் காட்டினார். தரவு சார்ந்த கொள்கை வகுப்பதற்கான நடைமுறைகளை செயல்படுத்துதல், சேவை வழங்கல் வழிமுறைகளை அதிகரித்தல் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிகரித்து வரும் சூழலை அவர் மீண்டும் வலியுறுத்தினார். குடிமக்களை மையமாகக் கொண்ட மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் புதுமையுடன் கூடிய நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் அம்மாநில அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதை அவர் மேலும் வலியுறுத்தினார்.
இதில் சிறப்புரையாற்றிய திரிபுரா மாநில அரசின் தலைமைச் செயலாளர் திரு. ஜிதேந்திர குமார் சின்ஹா மின்னணு அமைச்சரவை மற்றும் பயனாளி மேலாண்மை அமைப்பு உள்ளிட்ட மாநிலத்தின் குறிப்பிடத்தக்க டிஜிட்டல் நிர்வாக முயற்சிகளை விரிவாக எடுத்துரைத்தார். வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் மேம்பட்ட சேவைகளுக்கான தர நிலைகளை மேம்படுத்துவதற்கான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நிர்வாக கட்டமைப்புகளில் பிரதான நீரோட்டத்தில் கொண்டு வருவதற்கான உத்திசார் நடவடிக்கைகளின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். திறன் மேம்பாட்டை நிறுவனமயமாக்குவதன் முக்கியத்துவத்தையும், பொதுத்துறை அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் நெறிமுறை, உள்ளடக்கிய மற்றும் பொறுப்பான பயன்பாட்டிற்கான முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129310
***
TS/SV/DL
(Release ID: 2129373)