புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
தேசிய கணக்குகள் புள்ளிவிவரம்- 2025 வெளியீடு
प्रविष्टि तिथि:
16 MAY 2025 5:49PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தேசிய கணக்குகள் புள்ளிவிவரம்- 2025-ஐ வெளியிட்டுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் தேசிய வருவாய், உற்பத்தி, செலவினம் ஆகியவை பற்றிய விரிவான தரவுகளின் தொகுப்பாகும். கட்டமைக்கப்பட்ட தரவு அறிக்கைகள் மூலமும் முக்கியமான புள்ளி விவரம் உள்ளீடுகள் மூலமும் தேசிய கணக்குகளின் நுண்ணிய கருத்தை இந்த வெளியீடு வழங்குகிறது. இது கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், பகுப்பாய்வாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோர் இந்தியப் பொருளாதாரத்தின் செயல்பாடுகளையும், கட்டமைப்பு மாற்றங்களையும் புரிந்துகொள்ளவும், மதிப்பீடு செய்யவும் பயன்படும்.
2025 பிப்ரவரியில் வெளியிடப்பட்ட நிதியாண்டு 2023-24-க்கான முதலாவது திருத்தப்பட்ட ஜிடிபி மதிப்பீடுகள், நிதியாண்டு 2022-23-க்கான இறுதி மதிப்பீடுகள் ஆகியவற்றை பின்பற்றி இந்த வெளியீடு வந்துள்ளது.
மேலும் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி), மொத்த மதிப்பு கூடுதல், நுகர்வு, சேமிப்பு, மூலதன தகவல், சம்பந்தப்பட்ட பருண்மைப் பொருளாதார குறியீடுகள் ஆகியவற்றின் விவரங்கள் இந்த வெளியீட்டில் பெறப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129126
***
SM/SMB/AG/DL
(रिलीज़ आईडी: 2129170)
आगंतुक पटल : 26