பாதுகாப்பு அமைச்சகம்
கடல் நீரை நன்னீராக்குவதற்கான உயர் அழுத்த பாலிமெரிக் சவ்வை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது
Posted On:
15 MAY 2025 11:42AM by PIB Chennai
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கடல் நீரை உப்பு நீக்கி குடிநீராக்குவதற்கான உள்நாட்டு நானோபோரஸ் பல அடுக்கு உயர் அழுத்த பாலிமெரிக் சவ்வை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. கான்பூரை தளமாகக் கொண்ட டிஆர்டிஓ ஆய்வகமான பாதுகாப்புப் பொருட்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய கடலோர காவல்படை கப்பல்களில் உப்பு நீக்கும் ஆலைக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த மேம்பாடு எட்டு மாதங்கள் என்னும் சாதனை நேரத்தில் நிறைவடைந்துள்ளது.
கடலோரக் காவல் படையின் ரோந்து கப்பலின் தற்போதைய உப்பு நீக்கும் ஆலையில் ஆரம்ப தொழில்நுட்ப சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பாலிமெரிக் சவ்வுகளின் ஆரம்ப பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகள் முழுமையாக திருப்திகரமாக இருப்பது கண்டறியப்பட்டது. 500 மணிநேர செயல்பாட்டு சோதனைக்குப் பிறகு இறுதி செயல்பாட்டு அனுமதி வழங்கப்படும்.
தற்போது, இந்த அலகு பரிசோதனையில் உள்ளது. சில மாற்றங்களுக்குப் பிறகு கடலோரப் பகுதிகளில் கடல் நீரை உப்புநீக்கம் செய்வதற்கு இந்த சவ்வு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இது தற்சார்பு இந்தியா பயணத்தில் மற்றொரு படியாகும்.
***
(Release ID: 2128795)
SM/PKV/RR/RJ
(Release ID: 2128816)