விவசாயத்துறை அமைச்சகம்
விவசாய டிராக்டர்களுக்கான சிஎம்விஆர் சோதனை ஒப்புதலை என்ஆர்எஃப்எம்டிடிஐ பெற்றுள்ளது
Posted On:
14 MAY 2025 7:29PM by PIB Chennai
ஹரியானாவின் ஹசரில் உள்ள வடக்கு பிராந்திய பண்ணை இயந்திர பயிற்சி மற்றும் சோதனை நிறுவனம் (என்ஆர்எஃப்எம்டிடிஐ), “வேளாண் டிராக்டர்களுக்கான சிஎம்விஆர் சோதனை ஒப்புதல்” மற்றும் “வேளாண் டிராக்டர்கள் மற்றும் கூட்டு அறுவடை இயந்திரங்களின் சிஎம்விஆர் சோதனைக்கான என்ஏபிஎல் அங்கீகாரம்” ஆகியவற்றைப் பெற்றுள்ளது.
வேளாண் இயந்திரங்களின் பயிற்சி மற்றும் சோதனையில் முன்னணி பெயரான என்ஆர்எஃப்எம்டிடிஐ, டிடிசி, ஹிசார், கூட்டு அறுவடை இயந்திரங்களுடன் கூடுதலாக விவசாய டிராக்டர்களுக்கான சிஎம்விஆர் (மத்திய மோட்டார் வாகன விதிகள்) சோதனையை நடத்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக மாறியுள்ளது.
இது விவசாய டிராக்டர்கள் மற்றும் கூட்டு அறுவடை இயந்திரங்கள் இரண்டின் சிஎம்விஆர் சோதனைக்கு என்ஏபிஎல்-இன் (சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம்) அங்கீகாரம் பெற்றுள்ளது.
இது வட இந்தியாவில் உள்ள டிராக்டர் உற்பத்தியாளர்கள் தங்கள் டிராக்டர்களை இந்த நிறுவனத்தின் அருகிலுள்ள இடங்களில் சிஎம்விஆர் இணக்கத்திற்காக சோதிக்க உதவும். மேலும் என்ஏபிஎல் அங்கீகாரத்தின் கீழ் விவசாய டிராக்டர்கள் மற்றும் கூட்டு அறுவடை இயந்திரங்களின் சிஎம்விஆர் சான்றிதழ் உலகளவில் சோதனையின் நம்பகத்தன்மையையும் ஏற்றுக்கொள்ளலையும் அதிகரிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128728
***
RB/DL
(Release ID: 2128761)