அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தேசிய பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தன்னார்வ ரத்த தான இயக்கம் - மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்

Posted On: 11 MAY 2025 6:13PM by PIB Chennai

தற்போதைய பாதுகாப்புச் சூழ்நிலையில் "தேசிய சேவைக்கான ரத்த வங்கி" உருவாக்கத்திற்காக, அறிவியல் சமூகம் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர்  திரு ஜிதேந்திர சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த தன்னார்வ ரத்த தான முகாமை புதுதில்லியில் அவர் தொடங்கி வைத்தார். புத்தாக்க கண்டுபிடிப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், தேசிய நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் இரக்கமுள்ள குடிமக்களாகவும் அறிவியல் சமூகம் திகழ வேண்டும் என அவர் கூறினார்.

இந்த முகாமில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், பல்வேறு அறிவியல் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உற்சாகமாகப் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். அமைச்சர் திரு ஜிதேந்திர சிங், ரத்த தானம் வழங்கியவர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடி, அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டினார்.

****

(Release ID: 2128152)

TS/PLM/RJ


(Release ID: 2128170) Visitor Counter : 2