அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மிகச்சிறந்த செயல்பாட்டுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த உயவு எண்ணெயை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்
प्रविष्टि तिथि:
09 MAY 2025 6:05PM by PIB Chennai
மிகச்சிறந்த செயல்பாட்டுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த உயவு எண்ணெயை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது உராய்வு குறைப்பை கணிசமாக அதிகரிப்பதோடு ஒட்டுமொத்த செயல்பாட்டையும் விரிவுபடுத்துகிறது. மேலும் மரபுசார்ந்த உயவு எண்ணெய்க்கு நீடிக்கவல்ல மாற்றாக இருப்பதோடு திறன் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் இது தீர்வு காண்கிறது.
மரபுசார்ந்த கனிம அல்லது ரசாயன கூட்டுப்பொருட்களைக் கொண்ட செயற்கை எண்ணெய் அடிப்படையில் தயாரிக்கப்படும் உயவு எண்ணெய் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் நீடிக்கவல்ல மாற்றுக்கான தேவை ஏற்பட்டது.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி நிறுவனமான குவஹாத்தியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப மேம்பட்ட கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் புதிய உயவு எண்ணெயை உருவாக்கி உள்ளனர்.
நீடிக்கவல்ல இந்த உயவு எண்ணெயை உருவாக்கும் எந்திர செயல்பாட்டை அதிகரிப்பது மட்டுமின்றி பசுமை மற்றும் திறன்மிக்க உயவு எண்ணெய் தொழில்நுட்பத்தை நோக்கிய உலகளாவிய முயற்சியோடும் ஒத்துப்போவதாக இந்நிறுவனத்தின் பேராசிரியர் தேவசிஷ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127947
***
SMB/AG/DL
(रिलीज़ आईडी: 2127957)
आगंतुक पटल : 7