வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா - சிலி இடையே விரிவான பொருளாதார கூட்டு பேச்சுவார்த்தைகளுக்கான குறிப்பு விதிமுறைகள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து
प्रविष्टि तिथि:
09 MAY 2025 8:54AM by PIB Chennai
இந்தியா - சிலி நாடுகளிடையே 2025 - ம் ஆண்டு மே 08 - ம் தேதி விரிவான பொருளாதார கூட்டு நடவடிக்கைகளுக்கான குறிப்பு விதிமுறைகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் இரு நாடுகள் இடையேயான வர்த்தக உறவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
இவ்விரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட அம்சங்கள் அடங்கிய இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கான அந்நாட்டுத் தூதர்திரு. ஜுவான் அங்குலோ, மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் வர்த்தகத் துறை இணைச் செயலாளரும், இந்திய பிரதிநிதிக் குழுவின் தலைவருமான திரு. விமல் ஆனந்த், ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இரு நாடுகளின் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கருத்துக்களை பரஸ்பரம் இரு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர். மேலும் 2025 - ம் ஆண்டு மே 26-30 - ம் தேதிகளில் புது தில்லியில் நடத்துவதாக திட்டமிடப்பட்ட பயனுள்ள முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா - சிலி இடையே தற்போதுள்ள பயங்கரவாத தடுப்பு ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் விரிவான பொருளாதார கூட்டு நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தம் அமைந்துள்ளது. மேலும், டிஜிட்டல் சேவைகள், முதலீட்டு ஊக்குவிப்பு, கூட்டு ஒத்துழைப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரியவகை கனிம வளங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவான வாய்ப்புக்களை உள்ளடக்கி, பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127826
****
(Release ID:2127826)
TS/SV/RR/KR
***
(रिलीज़ आईडी: 2127850)
आगंतुक पटल : 21