பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘அர்னாலா’ – உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு

Posted On: 08 MAY 2025 5:39PM by PIB Chennai

கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) நிறுவனம் உள்நாட்டிலேயே வடிவமைக்கும் எட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல்களில் முதலாவது கப்பல் இன்று (மே 08, 2025) காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது.

இந்தப் போர்க்கப்பல் எல் அண்ட் டி, ஜிஆர்எஸ்இ பொதுத்துறை, தனியார் துறை ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு உற்பத்தியில் தனியார், பொதுத்துறை கூட்டு செயல்பாட்டின் வெற்றியை நிரூபிக்கிறது.

இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாக மகாராஷ்டிராவின் வசாய் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டையான ‘அர்னாலா’வின் பெயர் இந்தக் கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. 77 மீ நீளமுள்ள இந்தப் போர்க்கப்பல், டீசல் இஞ்ஜின்-வாட்டர்ஜெட் ஆகிய இரண்டின் அடிப்படையில் இயக்கப்படும் மிகப்பெரிய கடற்படை போர்க்கப்பலாகும். இந்தக் கப்பல் நீருக்கடியில் கண்காணிப்பு, தேடல், மீட்பு நடவடிக்கைகள், குறைந்த தீவிரம் கொண்ட கடல்சார் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் இணைவது இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை கணிசமாக அதிகரிக்கும்.

80%-க்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கத்துடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கப்பல் தற்சார்பு இந்தியா என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்துகிறது.

***

(Release ID: 2127729)

SM/PLM/AG/DL


(Release ID: 2127777) Visitor Counter : 2