ஆயுஷ்
சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள்- மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
08 MAY 2025 4:21PM by PIB Chennai
மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், சர்வதேச யோகா தினம் தொடர்பாக நேற்று (2025 மே 7) புதுதில்லியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். 2025 ஜூன் 21 உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள சர்வதேச யோகா தின ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆண்டு யோகா கொண்டாட்டத்தை சிறப்பாகவும் உலக அளவில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் கொண்டாட அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டு கொண்டாட்டம் பெரிய வெற்றியாக அமைவது மட்டுமல்லாமல், முழு உலகிற்கும் யோகா குறித்து உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைவதை உறுதி செய்ய அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
யோகா தினக் கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஒருங்கிணைந்து செயல்படுமாறு அதிகாரிகளிடம் அவர் கூறினார். யோகா மூலம் முழுமையான நல்வாழ்வு என்ற தகவலுடன் நாட்டின் ஒவ்வொரு மூலையையும், உலகின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
***
(Release ID: 2127705)
SM/PLM/AG/KR/DL
(रिलीज़ आईडी: 2127775)
आगंतुक पटल : 14