சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாபில் பொட்டாஷ் கண்டறிவதில் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

Posted On: 08 MAY 2025 3:52PM by PIB Chennai

2025 மே 7 அன்று, "தி மார்னிங் ஸ்டாண்டர்ட்" செய்தித்தாளில் "பொட்டாஷ் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது,  ஆய்வுகளில் மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது என ஆம் ஆத்மி அரசு கூறுகிறது" என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட சமீபத்திய தகவல்களுக்கு இந்திய புவியியல் ஆய்வு மையம், கடும் மறுப்புத் தெரிவித்துள்ளது. பொட்டாஷ் தொடர்பானவை உட்பட ஆய்வு நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் முற்றிலும் அறிவியல் தகுதி, புவியியல் தரவு மற்றும் தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் மண்டல விருப்பங்களின் அடிப்படையில் அல்ல என்றும் அந்த மையம் தெளிவுபடுத்தியுள்ளது.

சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு முதன்மையான அறிவியல் நிறுவனமான இந்திய புவியியல் ஆய்வு மையம், அதன் நீண்டகால தேசிய உத்தியின் ஒரு பகுதியாக பஞ்சாபில் பொட்டாஷ் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது. பஞ்சாபில் பெரிய நாகௌர்-கங்காநகர் உள்ளிட்டவை பொட்டாஷ் இருக்கும் படுகையின் ஒரு பகுதியாகும், இதில் பெரும்பாலானவை ராஜஸ்தானில் உள்ளன.

1985-86 முதல் பஞ்சாபில் உள்ள ஃபெரோஸ்பூர், ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மற்றும் ஃபாசில்கா மாவட்டங்களில் ஐந்து நிலை ஆய்வுத் திட்டங்களை இந்திய புவியியல் ஆய்வு மையம் மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வுகள் 630 முதல் 770 மீட்டர் வரையில் குறிப்பிடத்தக்க ஆழத்தில் பொட்டாஷ் கனிமம் இருப்பதை வெளிப்படுத்தின.

பஞ்சாபின் ஃபாசில்கா மாவட்டத்தில் உள்ள ராஜ்புரா-ராஜாவளி மற்றும் கித்ரான்வாலி-அஜிம்கர் பகுதிகளில் தற்போதைய களத் திட்டத்தின் படி 2025-26இல் இரண்டு புதிய ஆய்வுத் திட்டங்கள் 128 சதுர கி.மீ பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2025 ஜனவரி  இல் புவனேஸ்வரில் நடைபெற்ற மத்திய புவியியல் திட்டமிடல் வாரியத்தின் 64வது கூட்டத்தின் போது பஞ்சாப் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இது மாநில உள்ளீடுகளுக்கு இந்திய புவியில் ஆய்வு மையத்தின் பதிலை தெளிவாகக் காட்டுகிறது.

இந்த இரண்டு பகுதிகளிலும் ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன, மேலும் அதன் விளைவு மற்றும் நம்பிக்கைக்குரிய குறிகாட்டிகளின் அடிப்படையில், எதிர்காலத் திட்டங்களில் இந்தத் பகுதிகளை ஜி3 மற்றும் ஜி2 நிலைகளாக உயர்த்துவது குறித்து இந்திய புவியில் ஆய்வு மையம் பரிசீலிக்கும்.

பஞ்சாப் உட்பட அனைத்து இந்திய மாநிலங்களின் கனிம வளர்ச்சிக்கான தனது உறுதிப்பாட்டை இந்திய புவியில் ஆய்வு மையம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது, நடந்துகொண்டிருக்கும் பொட்டாஷ் ஆய்வு திட்டங்களுக்கு கூடுதலாக, இந்திய புவியில் ஆய்வு மையம் அதன் தேசிய ஆய்வு திட்டத்தில் பஞ்சாபை தொடர்ந்து சேர்த்துள்ளது.

****

(Release ID: 2127693)

SM/GK/SG/KR


(Release ID: 2127728)