குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கௌடில்யரின் தத்துவத்தை பிரதமர் செயல்வடிவில் எடுத்துக் காட்டியுள்ளார் - குடியரசுத் துணைத் தலைவர்
பிரதமர், ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர், பெரிய அளவிலான மற்றும் மகத்தான மாற்றத்தில் நம்பிக்கை கொண்டவர் - குடியரசுத் துணைத் தலைவர்
" அண்டை நாடு ஒரு எதிரி, எதிரியின் எதிரி நண்பன்" என்ற கௌடில்ய தத்துவத்தை மேற்கோளாக சுட்டிக்காட்டியுள்ள குடியரசுத் துணைத் தலைவர்
“அரசனின் மகிழ்ச்சி என்பது அவரது குடிமக்களின் மகிழ்ச்சியில் உள்ளது” - இது கௌடில்யரின் அறிவிப்பு; இது நிர்வாகத்தின் அமிர்தம் - குடியரசுத் துணைத் தலைவர்
ஜனநாயகம் என்பது அரசியலமைப்புச் சட்டத்துடன் தொடங்கவில்லை; இது கருத்துக்களின் வெளிப்பாடு மற்றும் உரையாடலில் வேரூன்றியுள்ளது - வேத கலாச்சாரத்தின் அனந்த் வாத் குறிப்புகள்; குடியரசுத் துணைத் தலைவரின் மேற்கோள்
புது தில்லியில் உள்ள இந்தியா பவுண்டேஷன் என்ற கௌடில்யா அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் குடியரசுத் துணைத் தலைவர் கலந்துரையாடல்
Posted On:
08 MAY 2025 2:33PM by PIB Chennai
“நமது பிரதமர் கௌடில்யரின் தத்துவத்தை செயல்வடிவில் வெளிப்படுத்தியுள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு நிர்வாக நடைமுறைகள், ஆட்சியின் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஏற்ற அரசமைப்பு, பாதுகாப்பு, அரசரின் பங்களிப்பு போன்ற அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதே கௌடில்யரின் சிந்தனையாக உள்ளது. மாறிவரும் அரசியல் கூட்டணிகளைக் கொண்ட பன்முகதன்மையுடன் கூடிய உலகில்... நமக்கு ஒரு கருத்து இருந்தது - அது இரவு முழுவதும் பறப்பது என்பதாகும். கூட்டணிகளிலும் இதைக் காண முடியும். இது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் என்று கௌடில்யரின் கற்பனை இருந்தது. 'அண்டை நாடு ஒரு எதிரி, எதிரியின் எதிரி ஒரு நண்பன்" என்று கௌடில்யர் கூறியதை குடியரசுத் துணைத் தலைவர் மேற்கோள் காட்டினார்.
புதுதில்லியில் இன்று இந்தியா அறக்கட்டளையைச் சேர்ந்த கௌடில்யா அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய திரு. தன்கர், “நமது பிரதமர், ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்றும், பெரிய அளவிலான நம்பிக்கை கொண்டவர் என்றும் கூறினார். பிரதமர் மிகப்பெரிய மாற்றத்தின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார். பத்தாண்டு கால நிர்வாகத்திற்குப் பிறகு, அரசின் முடிவுகள் அழியாத சுவடுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. பல தசாப்த கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஒருவரை நாம் பெற்றுள்ளோம். அதுதான் அனைத்து விதமான மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது” என்று குடியரசுத் துணைத் தலைவர் பெருமிதம் தெரிவித்தார்.
"ஜனநாயக நடைமுறைகள் மக்களின் பங்கேற்புடன் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை கௌடில்யர் கொண்டிருந்ததாக அவர் கூறினார். வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுடன் மக்களின் பங்கேற்பும் சம அளவில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். தேசிய நலனுக்காக தனிநபர்கள் பங்களிப்பதில் அவர் கூடுதல் முக்கியத்துவம் அளித்ததாக அவர் தெரிவித்தார். கண்ணியம், ஒழுக்கம் போன்ற தனிமனித இயல்புகளைச் சார்ந்துள்ளது என்றும், இவற்றைக் கொண்டுதான் நாடு என்பது வரையறுக்கப்படுகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். அதேபோல், 'ஒரு சக்கரம் மட்டுமே வண்டியை நகர்த்த முடியாது என்பதை போல' நாட்டின் நிர்வாகத்தை தனி நபர் ஒருவரால் நிறைவேற்ற முடியாது என்று குடியரசுத் துணைத் தலைவர் கௌடில்யரை மேற்கோள் காட்டினார்.
இத்தகைய நெறிமுறைகள் சமகால நிர்வாகத்தில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்தார், “இந்த நாட்டில் புதுமையான நிர்வாகம் நடைமுறையில் உள்ளது. நாட்டில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களுக்கு அதிகாரிகள் செல்வதற்குத் தயங்கிய நிலையில், பிரதமர் திரு நரேந்திர மோடி வளர்ச்சியில் பின்தங்கியுள்ள அத்தகைய மாவட்டங்களுக்கு 'முன்னேற விரும்பும் மாவட்டங்கள்' என்று பெயரிட்டடார். தற்போது அவை வளர்ச்சியில் முன்னணி மாவட்டங்களாக மாறிவிட்டன. தொழில்முனைவோருக்கு வசதிகள் கிடைக்கும் சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் மக்கள் பெருநகரங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கிறார்கள் என்று கருதிய பிரதமர், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களும் பொருளாதார நடவடிக்கைகளின் மையங்களாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதிகாரம், நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகள் குறித்து விவரித்த குடியரசுத் துணைத் தலைவர், "அதிகாரம் சில வரம்புகளால் நிர்ணயிக்கப்படுகிறது என்றார். அதிகாரத்தின் வரம்புகளை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ளும் போதுதான் ஜனநாயக நடைமுறைகள் மேம்படுகிறது என்று தெரிவித்தார். கௌடில்யரின் தத்துவத்தை ஆழ்ந்து கவனித்தால், இவை அனைத்தும் ஒரே ஒரு சாரமாக, ஆட்சியின் அமிர்தமாக - மக்கள் நலனில் - ஒன்றிணைவதைக் காண முடியும்" என்றார்.
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தை மேற்கோள் காட்டிய, திரு. தன்கர், ‘மன்னரின் மகிழ்ச்சி அவரது குடிமக்களின் மகிழ்ச்சியில் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டினார். ஜனநாயக ரீதியாக இயங்கும் எந்தவொரு நாட்டின் அரசியலமைப்புக் சட்டத்தையும் உற்று நோக்கினால், இந்தத் தத்துவம் ஜனநாயக ஆட்சி முறை மற்றும் அதன் விழுமியங்களின் அடிப்படையான ஆன்மா மற்றும் சாரத்தைக் காண முடியும் என்று தெரிவித்தார்.
இந்தியாவின் நாகரிக நெறிமுறைகள் குறித்துப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், "கருத்துக்களின் வெளிப்பாடு, உரையாடல் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் போது ஜனநாயகம் சிறப்பாக வளர்க்கப்படுகிறது" என்றார். இது ஜனநாயகத்தை வேறு எந்த வகையான ஆட்சி முறைகளிலிருந்து வேறுபடுத்துகிறது என்று கூறினார். மேலும் இந்தியாவில், ஜனநாயகம் நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததாலோ அல்லது அந்நிய ஆட்சியிலிருந்து நாம் சுதந்திரம் பெற்றதாலோ தொடங்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் ஒரு ஜனநாயக நாடாக இருக்கிறோம். மேலும் இந்த வெளிப்பாடு மற்றும் உரையாடல், நிரப்பு வழிமுறை - அபிவ்யக்தி, வாத் விவாத் எனப்படும் வேத கலாச்சாரத்தில் அனந்த் வாத் என்று அறியப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127671
****
SM/SV/RJ/KR
(Release ID: 2127715)