அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உயிரி உற்பத்திக்கான பயோஇ3-ன் கீழ் சிறப்பு மையங்களை நிறுவுவதற்கான உயிரி செயற்கை நுண்ணறிவு குறித்த முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன
Posted On:
05 MAY 2025 4:57PM by PIB Chennai
உயிரி உற்பத்திக்கான பயோஇ3-ன் கீழ் சிறப்பு மையங்களை நிறுவுவதற்கான உயிரி செயற்கை நுண்ணறிவு குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்க உயிரி தொழில்நுட்பத் துறையும், உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி மன்றமும் அழைப்பு விடுத்துள்ளன. செயற்கை நுண்ணறிவையும் உயிரியலையும் ஒன்றிணைப்பதன் மூலம் சுகாதாரம், வேளாண்மை, சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான, புதிய ஆராய்ச்சிக்கு வழிவகுப்பதற்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பயோ-ஏஐ மையங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன.
உயிரி மூலக்கூறு வடிவமைப்பு, நீடிக்கவல்ல வேளாண்மை, செயற்கை உயிரியல், ஆயுர்வேதம் ஆகியவற்றில் உள்ள முக்கியமான உயிரியல் சவால்களுக்கு தீர்வு காண உயிரியலில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான உத்தேச ஒப்புதல் ஆவணம் தனித்துவத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பிரிவுகளில் சாத்தியமான ஆராய்ச்சி தீர்வுகள் பல துறைசார்ந்த குழுக்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127063
***
(Release ID: 2127063)
TS/SMB/RR/KR/DL
(Release ID: 2127130)
Visitor Counter : 18