அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஆழ்-தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு
Posted On:
05 MAY 2025 4:53PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் விரிவான மதிப்பாய்வு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஆழ்-தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு பகிர்வு உள்ளிட்ட அறிவியல் சார்ந்த வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ரீதியிலான கண்டுபிடிப்புகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், புதிதாக உருவாக்கப்பட்ட அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ஏ.என்.ஆர்.எஃப்) வளர்ந்து வரும் பங்களிப்பு மற்றும் புவிசார் முன்முயற்சி போன்ற தற்போதைய தேசிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
அந்த அறக்கட்டளைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சிவகுமார் கல்யாணராமன் மற்றும் அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகளுடன் அமைச்சர் விரிவாகக் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது, டாக்டர் கல்யாணராமன், அறக்கட்டளையின் தொலைநோக்குப் பார்வை குறித்து விவரித்தார்.
உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையானது "சிறு வணிகத்திற்கான வலுவான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு" திட்டத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது. இது சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உலக பயன்பாடுகளுக்கான தொழில்நுட்பங்களை அளவிட அதிகாரம் அளிக்கும்.
தற்போதுள்ள தேசிய ஆராய்ச்சி உள்கட்டமைப்பை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் எடுத்துரைத்தார். நாடு முழுவதும் பயன்படுத்தப்படாத அறிவியல் உபகரணங்கள் மற்றும் வசதிகளை அணுகுவதற்கு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க உள்கட்டமைப்பு என்ற புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் உருவாக்கப்படுகிறது என்றார். இதன் மூலம் ஆழ்- தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பயனடையும். அனுசந்தன் அறக்கட்டளையின்
(ஏ.என்.ஆர்.எஃப்) நோக்கம் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஈடுபடுத்தவும் தலைமை நிர்வாக அதிகாரியை அவர் வலியுறுத்தினார். மேலும் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் சொந்த மருத்துவ ஆராய்ச்சி பூங்காக்களை நிறுவ உதவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் டாக்டர் ஜிதேந்திர சிங் ஏ.என்.ஆர்.எஃப் அறக்கட்டளையை கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127062
***
TS/GK/LDN/DL
(Release ID: 2127129)
Visitor Counter : 21