மத்திய பணியாளர் தேர்வாணையம்
ஒருங்கிணைந்த புவி அறிவியலாளர் தேர்வு 2024
Posted On:
05 MAY 2025 4:43PM by PIB Chennai
2024 ஆம் ஆண்டின் ஒருங்கிணைந்த புவி அறிவியலாளர் (ஜியோ-சயின்டிஸ்ட்) தேர்வு முடிவு குறித்து 23.12.2024 தேதியிட்ட செய்திக்குறிப்பில், 69 விண்ணப்பரதாரர்கள் நியமனத்திற்கு தகுதி வரிசையில் பரிந்துரைத்து அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த புவி அறிவியலாளர் தேர்வு 2024 இன் விதி 16 (4) மற்றும் (5)ன் படி, ஆணையம் பரிந்துரைக்கப்பட்ட கடைசி விண்ணப்பதாரருக்குப் பிறகு ஒருங்கிணைந்த காத்திருப்போர் பட்டியலையும் வழங்கியுள்ளது.
தற்போது சுரங்க அமைச்சகத்தின் கோரிக்கையின்படி, ஒருங்கிணைந்த புவி அறிவியலாளர் தேர்வு 2024 ஆம் ஆண்டுக்கான முன்பதிவுப் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து, 3 விண்ணப்பதாரர்களை ஆணையம் இதன் மூலம் பரிந்துரைக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுடன் சுரங்க அமைச்சகம் நேரடியாகத் தொடர்பு கொள்ளும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127057
***
TS/GK/LDN/KR/DL
(Release ID: 2127114)
Visitor Counter : 23