அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஹானர்ஸ் கிராஜூவேஷன் 2025 கல்வி உதவித் தொகை விருதினை சூரிய சக்தி என்ஜின் கருவியை உருவாக்கியுள்ள ஜம்மு சிஎஸ்ஐஆர் – ஐஐஐஎம் வென்றுள்ளது
Posted On:
05 MAY 2025 1:11PM by PIB Chennai
குறிப்பிடத்தக்க சாதனையாக டல்ஹவுசி பொதுப் பள்ளியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் ஜேப்டெக் சிங் பாம்ரா, சூரிய சக்தி என்ஜின் என்கிற சோலார் மெக் எஞ்சின் கருவியை உருவாக்கியதற்காக ஹானர்ஸ் கிராஜூவேஷன் 2025 கல்வி உதவித் தொகை விருதினை பெற்றுள்ளார்.
ஜேப்டெக் சிங் பாம்ராவும், அவரது வழிகாட்டி டாக்டர் நசீர் உல் ரஷீதும் ஜிக்யாசா ஹேக்கத்தான் முன்முயற்சியின் கீழ் இந்த சூரிய சக்தி என்ஜின் கருவியின் செயல் முறை விளக்கத்தை அளித்தனர்.
உலகம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான ஆய்வுகளிலிருந்து 5 உலகளாவிய வெற்றியாளர்களில் ஒருவராக ஜேப்டெக் சிங் பாம்ரா உருவாகியுள்ளார். இவருக்கு அமெரிக்காவில் இளநிலை பட்டப்படிப்பு படிப்பதற்கு 10,000 அமெரிக்க டாலர் வழங்கப்படுகிறது. கூடுதல் மேம்பாட்டிற்காகவும் அவரது கண்டுபிடிப்பு திறனை வளர்ப்பதற்காகவும் கூடுதலாக 5,000 அமெரிக்க டாலர் மானியமாக வழங்கப்படும். குறிப்பிடத்தக்க வகையில் அவரது கண்டுபிடிப்பு இந்த ஆண்டு வெற்றியாளர்களிடையே முதன்மை தொழில்நுட்பமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஹானர்ஸ் கிராஜூவேஷன் திட்டம் தொடங்கப்பட்ட 2012–ம் ஆண்டுக்குப் பின் இந்த விருதினை பெறும் இந்தியாவின் முதல் மாணவராக ஜேப்டெக் உள்ளார். அவரது புதிய கண்டுபிடிப்பு மற்றும் கல்வித்திறனை அங்கீகரித்து இளநிலை படிப்புகளுக்காக ஆண்டுதோறும் 16,000 அமெரிக்க டாலர் கல்வி உதவித்தொகை வழங்க அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் உள்ள முதல் நிலையில் உள்ள 10 பல்கலைக்கழகங்கள் முன்வந்துள்ளன.
இதையும் சேர்த்து மொத்தம் 31,000 அமெரிக்க டாலரை ஜேப்டெக் சிங் பாம்ரா பெறுவதையடுத்து தனது சூரிய சக்தி எந்திரக் கருவியை மேலும் மெரூகூட்டவும் முன்னணியில் உள்ள உலக பல்கலைக்கழகம் ஒன்றில் தனது உயர்கல்வியை தொடரவும் திட்டமிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126984
***
(Release ID: 2126984)
TS/SMB/RR/KR
(Release ID: 2127089)
Visitor Counter : 8