பாதுகாப்பு அமைச்சகம்
பேரிடர் நிவாரண பயிற்சிக்காக ஐஎன்எஸ் ஷாரதா மாலத்தீவை வந்தடைந்தது
Posted On:
05 MAY 2025 1:57PM by PIB Chennai
பிராந்திய ஒத்துழைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, 2025 மே 04 முதல் 10 வரை திட்டமிடப்பட்ட மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பயிற்சிக்காக (எச்.ஏ.டி.ஆர்) இந்தியக் கடற்படையைச் சார்ந்த ஷாரதா கப்பல் மாலத்தீவின் மாஃபிலாஃபுஷி தீவை வந்தடைந்தது. இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே வலுவான பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்புக்கு இந்தப பயிற்சி ஒரு சான்றாகும். இது இந்தியாவின் பிராந்தியம் முழுவதற்குமான பாதுகாப்பு, வளர்ச்சிக்கான பரஸ்பர, முன்னேற்றத்திற்கான ("மஹாசாகர்") தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்துள்ளது. இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சிகளை வலியுறுத்துகிறது.
இந்தப் பயிற்சி இந்திய கடற்படைக்கும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட பிறகு பேரிடர் மறுமொழி ஒருங்கிணைப்பு, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், மருத்துவ உதவி, தளவாட ஆதரவு, கூட்டுப் பயிற்சிகள், பயிற்சி அமர்வுகள் மற்றும் சமூக ஈடுபாடு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில் இந்தப் பயிற்சி கவனம் செலுத்தும்.
இத்தகைய கூட்டு முயற்சிகள் மூலம், இந்தியாவும் மாலத்தீவும் தங்கள் கூட்டாண்மையைத் தொடர்ந்து வலுப்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் மற்றும் பிற மனிதாபிமான சவால்களை திறம்பட எதிர்கொள்ள தயாராக இருப்பதை உறுதி செய்கின்றன.
***
Release ID=2126999
TS/GK/LDN/KR
(Release ID: 2127071)
Visitor Counter : 18