எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எம்ஓஐஎல் நிறுவனம் ஏப்ரல் மாத உற்பத்தியில் சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளது

Posted On: 04 MAY 2025 6:34PM by PIB Chennai

2026-ம் நிதியாண்டின் முதல் மாதமான 2025 ஏப்ரல் மாதத்தில் 'மாங்கனீஸ் ஓர் இந்தியா லிமிடெட்' நிறுவனமான எம்ஓஐஎல் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த உற்பத்தி செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. இது செயல்பாட்டுச் சிறப்பிற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

*ஏப்ரல் மாதத்தில் 1.62 லட்சம் டன் மாங்கனீசு தாது உற்பத்தியை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது. இது முந்தையாண்டு இதே காலகட்ட உற்பத்தியை விட 1.5% அதிகமாகும்.

* ஆய்வுக்கான துளையிடல் 11,453 மீட்டர் ஆக உள்ளது.  இது முந்தைய ஆண்டை விட 58% அதிகமாகும்.

எம்ஓஐஎல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு அஜித் குமார் சக்சேனா கூறுகையில், "எம்ஓஐஎல்-ன் ஏப்ரல் செயல்திறன் இந்த ஆண்டிற்கு ஒரு நேர்மறையான பாதையை அமைத்துள்ளது. நிறுவனம் நிலையான வளர்ச்சிக்கும் சிறந்த மதிப்பு உருவாக்கத்திற்கு உறுதிபூண்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

****

(Release ID: 2126814)

SM/PLM/RJ


(Release ID: 2126861) Visitor Counter : 11
Read this release in: English , Hindi , Urdu